பக்கம்:தாய்லாந்து.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

வில்லையென்றும் படப்பிடிப்புக் குழுவினர் அந்தப் பாலத்தைப் பல கோணங்களில் போட்டோ எடுத்துக் கொண்டு போய் அச்சாக அது போலவே இலங்கையில் ஒரு ‘செட்’ போட்டு முடித்து விட்டார்கள் என்றும் சொன்னார்கள்.

க்வாய் பாலம் பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகவே இருந்தது. ஆயினும் அதன் சரித்திரப் பின்னணி மிகமிக பயங்கரமானது. காஞ்சனபுரிக்கு நாலு மைல் தூரத்தில் உள்ள க்வாய் பாலத்தைக் காண நாங்கள் ஒரு ‘ஜமா'வாகப் புறப்பட்டோம். பாங்காக்கிலிருந்து 129 கி.மீ. தூரம் பயணம் செய்து வடமேற்கு திசையில் உள்ள காஞ்சனபுரியை அடைந்தபோது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. எதிர்பார்த்த பிரமிப்போ வியப்போ இல்லை.

யூனிபார்ம் அணிந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் அதன் மீது ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் போல் எனக்கும் அதன் மீது நடக்க வேண்டும் போல் இருந்தது. நடந்தேன். அப்படி நடக்கும் போது இதன் பின்னணியான சரித்திர நிகழ்ச்சிகள், ரயில் ஓடும் போது மரங்களும் மலைகளும் வேகமாய் எதிர் நோக்கி ஓடுமே, அந்த மாதிரி என் கண் முன் ஓடின.

17
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/16&oldid=1075187" இருந்து மீள்விக்கப்பட்டது