பக்கம்:தாய்லாந்து.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

அவ்வளவுதான்; அங்கங்கே காவலில் வைக்கப்பட்டிருந்த போர்க் கைதிகளை ஆடுமாடுகள் போல் அவசரம் அவசரமாக இங்கே கொண்டு வந்து சேர்த்தார்கள். ஆசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் போர்க் கைதிகளைக் கொண்டு வந்து ரயில் பாதைக்கு வேண்டிய கல்லையும், மண்ணையும், இரும்பையும் அவர்கள் தலையிலும் முதுகிலும் ஏற்றினார்கள். கல்லிலும் முள்ளிலும் கால்கடுக்க நடக்க வைத்தார்கள். போதிய உணவும் ஓய்வும் இல்லாத காரணத்தாலும், கடுமையான உழைப்பாலும் அந்த வீரர்களில் பலர் நாளொரு எலும்பும் பொழுதொரு தோலுமாக மாறிச் செத்து மடிந்தார்கள்.

சுகாதாரமற்ற சூழ்நிலை, அடி உதை, வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற கொடிய நோய்களால்

19
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/18&oldid=1075102" இருந்து மீள்விக்கப்பட்டது