பக்கம்:தாய்லாந்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதைக்கு வேண்டிய ஆதாரங்களைப் புகைப்படமாக எடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீவே “ஒரு நிமிடம், இதோ போய் அந்த என்ஜினை எடுத்து வந்துவிடுகிறேன்” என்றார். போனவர் ரொம்ப நேரமாகியும் திரும்பவில்லை. ”என்ஜினைப் படம் எடுத்து வருகிறேன் என்று போனவர் என்ன ஆனார்?” என்று கவலைப்பட்டேன் நான்.

“ஒருவேளை என்ஜினையே தூக்கி எடுத்துக் கொண்டுவரப் போகிறாரோ என்னவோ!” என்றார் ராணிமைந்தன்.

தினமும் மாலை நான்கு மணிக்கு அந்த என்ஜின் இந்தப் பாலத்தின் மீது ஒருமுறை போய்த் திரும்புவது வழக்கம் என்றும், சரித்திரத்தை சற்றே ஞாபகப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தச் சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு தகவலைச் சொன்னார் கய்டு.

ந்த ரயில் பாதையை ‘டெத் ரெயில்வே’ என்று அழைக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களைக் கபளீகரம் செய்த அந்தப் பாலத்துக்கு இதைவிடப் பொருத்தமான பெயர் வேறு என்ன இருக்க முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/20&oldid=1075190" இலிருந்து மீள்விக்கப்பட்டது