பக்கம்:தாய்லாந்து.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

காஞ்சனபுரி ‘லெமெட்ரி'க்குள் நுழையும்போதே ஒரு சோகம் நம்மைக் கவ்விக் கொள்கிறது. பயணம் செய்து வந்த சொகுசு வேனின் ஏ.ஸி. இதம், காதில் ஒலித்துக் கொண்டிருந்த இன்னிசையின் சுகம் எல்லாமே சட்டென்று மறைந்து மனம் பாறையாய்க் கனத்துப் போகிறது.

ஏறத்தாழ ஏழாயிரம் கல்லறைகள் கொண்ட அந்த இடம் ஓர் அழகிய நந்தவனம் போலக் காட்சி தந்தாலும், அந்தச் சூழ்நிலையில் ஓர் ஆழ்ந்த சோகமும் இழையோடிக் கொண்டிருக்கிறது.

கல்லறை ஒவ்வொன்றிலும் ஒரு வீரனின் பெயர், வயது. அவன் வகித்த பதவி போன்ற விவரங்களுடன், சின்னஞ்சிறு வாசகம் ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒரு கல்லறையில், “ஹி ஈஸ் நாட் டெட். ஹி ஈஸ் ஜஸ்ட் அவே” என்று எழுதப்பட்டுள்ளது.

லான்ஸ் நாயக்கரம்தான், லான்ஸ் நாயக் என். நயனமூர்த்தி, சிப்பாய் அப்துல் காலிக் போன்ற பெயர்களை அங்கே பார்த்த போது பெருமையாகவும், அதேசமயம் வேதனையாகவும் இருந்தது. இவர்கள் மூவரும் பஞ்சாப் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த இளம் வீரர்கள் என்று கல்லெழுத்து சொல்லியது.

வரிசை வரிசையான கல்லறைகளுக்கு இடையே பச்சைப் பசேலென்ற புற்கள் பாய் விரித்திருக்கின்றன. தாய்லாந்து மண்ணில் தோன்றும் பச்சையின் அழகே தனி. ஒவ்வொரு கல்லறைக்கும் பக்கத்தில் வண்ண வண்ண மலர்களாய்ப் பூத்துச் சிரிக்கும் செடிகள்!

எவ்வளவுதான் மலர்களும், பசுமையும் சூழ்ந்திருந்த போதிலும் கல்லறை என்று வரும்போது கூடவே ஒரு அச்சமும்

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/21&oldid=1075191" இலிருந்து மீள்விக்கப்பட்டது