பக்கம்:தாய்லாந்து.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

சோகமும் இருக்கத்தான் செய்கின்றன. ‘இங்கே இரவில் பேய், பிசாசுகள் நடமாட்டம் இருக்குமா?’ என்று அங்கே பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பெண் ஒருத்தியிடம் கேட்டோம்.

“சாயங்காலம் ஐந்து மணிக்கு மேல் இங்கே யாரும் தங்குவதில்லை. இரவு நேரங்களில் ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அது உண்மையா என்று தெரியவில்லை. பகல் நேரங்களில் அவை நிச்சயம் வருவதில்லை. ஒரு வேளை உயிருள்ள மனிதர்களின் நடமாட்டத்துக்கு அஞ்சியோ என்னவோ!” என்று சிரித்தார் அந்தப் பெண்மணி.

சற்றுத் தொலைவில் ஒரு கல்லறையின் முன் சோகமே வடிவமாக அமர்ந்திருந்தார் வயதான ஓர் அம்மையார்.

அருகில் சென்று பார்த்தபோது அவரது கண்களில் நீர்த் திரையிட்டிருப்பது தெரிந்தது. பூச்செண்டு ஒன்றைக் கல்லறை

23
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/22&oldid=1075192" இருந்து மீள்விக்கப்பட்டது