பக்கம்:தாய்லாந்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யின் முன் வைத்து விட்டுக் குனிந்து முத்தமிட்டாள். பிறகு மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்துவிட்டு மெல்ல எழுந்து கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினோம். நேரில் விசாரிப்பதற்குத் தயக்கமாயிருந்ததால். அவர் போன பிறகு அந்தக் கல்லறையில் காணப்பட்ட பெயரைப் பார்த்தோம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு போர் வீரன் என்று தெரிந்தது. அன்று அந்த வீரனின் பிறந்த நாளாம். அவனது கல்லறைக்கு வந்து மலர் வைத்துப் போன அந்தப் பெண்மணியின் துயரம் தோய்ந்த முகத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. இம்மாதிரியான காட்சி அந்த இடுகாட்டுக்குப் புதிதல்லவாம். ஏதாவது ஒரு கல்லறை முன் உறவுக்காரர்கள் யாராவது வந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பது ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சியாம்!

“சற்று தூரத்தில் jeath மியூஸியம் இருக்கிறது. அங்கே போகலாமா?” என்று அழைத்தார் கய்டு.

தாய்லாந்து மக்களின் ஆங்கில உச்சரிப்பிலும், ஸ்பெல்லிங்கிலும் நிறைய வித்தியாசம் உள்ளன. ஆர் என்ற எழுத்தை அவர்கள் சரியாக உச்சரிப்பதில்லை. ராமா என்றால் லாமா என்கிறார்கள். அதுபோல் ‘டெத் மியூஸியம்’ என்பதில் ஸ்பெல்லிங்கை ‘டி’ போடுவதற்குப் பதிலாக மாற்றி “ஜெ” போட்டிருக்கிறார்களோ என்று நினைத்தேன்.

“D க்குப் பதில் J போட்டிருக்கிறார்களே, இது தவறு இல்லையா?” என்று கேட்டேன்.

“தவறு ஒன்றுமில்லை. யுத்தத்தில் பங்கேற்ற ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஹாலந்து ஆகிய நாடுகளின் முதலெழுத்துக்களைத் தொகுத்த போது உருவான சொல்லைத்தான் அப்படி jEATH என்று போட்டிருக்கிறார்கள்’ என்றார் கய்டு.

போர்க்காலத்தில் கைதிகள் எந்த மாதிரி மூங்கில் வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தார்களோ அதே வடிவத்தில் அதே அளவில் ஒரு மூங்கில் வீட்டை உருவாக்கி அதிலேயே வீரர்கள் உபயோகித்த ஆயுதங்களையும், தட்டு, கரண்டி போன்ற பாண்டங்களையும் வைத்திருக்கிறார்கள்.

ஒரு போர்க் கைதியின் வாழ்க்கை அந்த நாளில் எத்தகைய

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/23&oldid=1075194" இலிருந்து மீள்விக்கப்பட்டது