பக்கம்:தாய்லாந்து.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கொடுரம் நிறைந்தது என்பதை அக்கண்காட்சி விளக்கமாய்க் காட்டுகிறது.

குறிப்பாக க்வாய் நதியின் மீது பாலம் கட்டப்பட்ட போது அக்கைதிகள் பட்ட கஷ்டங்களையும் அனுபவித்த துன்பங்களையும் பெரிய அளவில் என்லார்ஜ் செய்து வைத்திருக்கிறார்கள். நிர்வாணமாக அவர்களை நிற்கவைத்து அடிப்பது, ஒரு குவளை குடிநீருக்காக அவர்கள் காத்திருக்கும் பரிதாபம், பசி பட்டினியாலும் சத்துணவு இல்லாமையாலும் கொடிய நோய்களால் பீடிக்கப்பட்டு அல்லல்படுவது, இப்படிப் பல்வேறு புகைப் படங்கள்.

தாய்லாந்து.pdf
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/24&oldid=1075109" இருந்து மீள்விக்கப்பட்டது