பக்கம்:தாய்லாந்து.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

வாங்கிக் கொண்டோம். பல்வேறு பழங்களுக்கிடையே விதை நீக்கிய புளியம்பழமும் இடம் பெற்றிருந்தது. “இதென்ன வேடிக்கை? புளியைக் கொண்டு வந்து வைத்திருக்கிறீர்களே?” என்று கேட்டேன்.

“இதைச் சாப்பிட்டுப் பாருங்கள்” என்று கொஞ்சம் சாம்பிள் கொடுத்தாள் அந்தப் பெண். வாயில் போட்டுப் பார்த்தேன். கற்கண்டாய் இனித்தது.

“இது ஒரிஜினல் புளியம்பழமாக இருக்க முடியாது. புளிய மரத்துக்கும் பேரீச்சை மரத்துக்கும் எங்கோ தப்புத் தண்டா நடந்திருக்கிறது” என்றேன் நான்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த ஊர் மண்ணில் விளையும் புளியம் பழம் இப்படித்தான் இனிக்கும்” என்றார் டிரைவர்.

ஹோட்டலை அடைந்து படுக்கையில் சாய்ந்த பின்னும்

27
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/26&oldid=1075196" இருந்து மீள்விக்கப்பட்டது