பக்கம்:தாய்லாந்து.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


5

தாய்லாந்து மக்கள் எதை வேண்டுமானாலும் சகித்துக் கொள்வார்கள். ஆனால், தங்கள் அரசரைப் பற்றிய அவதூறான பேச்சை மட்டும் ஒருநாளும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.

இப்போது ஆட்சி புரியும் மன்னர் பூமிபால் அவர்களை அந்த மக்கள் ஒரு தெய்வமாகவே வழிபடுகிறார்கள்.

பல்வேறு சாம்ராஜ்யங்கள் தாய்லாந்து மண்ணை ஆண்டு வந்தன என்றாலும், 1782ல் தொடங்கிய சக்ரி சாம்ராஜ்யம்தான் தாய்லாந்து சரித்திரத்தின் முதல் அத்தியாயமாய்க் கருதப்படுகிறது. “ராமா மன்னர்களின் வரிசை ஆரம்பமே அது முதல்தான்” என்றார் வழிகாட்டி.

“ராமா மன்னர்களா?”

“ஆமாம்... அவர்களை கிங் ராமா ஒன், கிங் ராமா டூ என்று தான் குறிப்பிடுகிறார்கள். இங்கிலாந்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், ஆறாம் ஜார்ஜ் மன்னர் என்று சொல்கிற மாதிரி இப்போதைய மன்னர் பூமிபால் ஒன்பதாவது ராமா.”

ராமாயணத்தின் செல்வாக்கு எந்த அளவுக்குத் தாய்லாந்தில் வேரூன்றி இருக்கிறது என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு சான்று வேண்டியதில்லை.

முதலாம் ராமாதான் தாய்லாந்தின் தலையெழுத்தை மாற்றி எழுதிய பிரம்மா என்றும், தாய்லாந்து மொழிக்கு வரிவடிவம் கொடுத்த பெருமையும், தலை நகரைப் பாங்காக்குக்கு மாற்றிய சாதனையும் அவருடையதுதான் என்றும் சொன்னார்கள்.

அவருக்கு அடுத்தபடி மக்களால் மிகவும் போற்றப்பட்டவர் ஐந்தாம் ராமா மன்னர் புரட்சிகரமான திட்டங்களைப் புகுத்தி, மேற்கத்திய தொழில் நுட்பங்களைத் தம் நாட்டுக்கு

31
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/30&oldid=1075200" இருந்து மீள்விக்கப்பட்டது