பக்கம்:தாய்லாந்து.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்கள் தவிர, தாமும் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகிறார்.

ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் அரண்மனை வாசலில் விவசாயிகளுக்கு விதை வழங்கு விழா என்று ஒரு பெரிய விழா நடைபெறுகிறது. ஏராளமான கிராம மக்களும் விவசாயிகளும் அந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள். சம்பிரதாயமான சடங்குகளுக்குப் பின்னர், மன்னரே தம் கையால் வழங்கும் விதையை வாங்கிக் கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு முண்டியடித்துக் கொண்டு செல்வார்களாம்! தாங்கள் சேமித்து வைத்துள்ள விதைகளுடன் அரசரிடமிருந்து பெற்றுச் செல்லும் விதையையும் கலந்து விதைத்தால் விளைச்சல் பல மடங்காகப் பெருகுவதாக ஒரு நம்பிக்கையாம். நாம் இங்கே ஆடிப்பட்டம் தேடி விதைப்பது மாதிரி அங்கே அரசர் தொட்ட விதையை ஓடிப் பெற்று விதைக்கிறார்கள்.

“எங்கள் மன்னருக்கு விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதைப் போலவே இசைக் கலையிலும் ஈடுபாடு அதிகம். பல இசைக் கருவிகளை மீட்டி இசைப்பதில் விற்பன்னர். குறிப்பாக ஜாஸ் இசையில் வல்லவர். அருமையாகப் பியானோ வாசிப்பார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவராயிற்றே!” என்று பெருமைப்பட்டுக் கொண்டார் கய்டு.

டி.வி.யில் ஒருநாள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மன்னர் பூமிபால் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளை மக்கள் ஆர்வத்தோடு பார்த்து மகிழ்ந்தார்கள்.

டி.வி. காமிராகூட அவரை நேருக்கு நேர் சந்திக்காமல் சற்றுத் தள்ளி நின்றே பவ்யமாகப் பின் தொடர்கிறது.

தாய்லாந்தின் உயர் அதிகாரிகள், தளபதிகள் எல்லாருமே மன்னரின் முன்நின்று பேசும் போது ஒரு தனி மரியாதை காட்டுகிறார்கள். மன்னர் எப்போதும் ஜூம் லென்ஸ் பொருத்தப் பட்ட ஒரு காமிராவைக் கூடவே எடுத்துச் செல்கிறார். சிற்சில நிகழ்ச்சிகளை அவரே படம் எடுக்கிறார். மற்ற நேரங்களில் காமிராவைக் கணவரிடமிருந்து வாங்கி வைத்துக் கொள்கிறார் கூடவே செல்லும் அவரது மனைவி. ராஜாவும், ராணியும் எங்கும் சேர்ந்தேதான் போகிறார்கள். அப்படிப் போகும்போது சிற்சில சமயங்களில் ராணி தமக்குரிய தனி அந்தஸ்தோடு அரசருக்-

36
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/35&oldid=1075204" இருந்து மீள்விக்கப்பட்டது