பக்கம்:தாய்லாந்து.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

குச்சற்றுப் பின்தள்ளியே வெண் கொற்றக் குடையின் கீழ் நடந்து செல்கிறார்.

இப்போதைய மன்னர் பூமிபால்தான் அதிக ஆண்டுகள் தொடர்ந்து (46 ஆண்டுகள்) ஆட்சி நடத்தி வருகிறவராம். ராஜ குடும்பத்தின் பெருமையும் கெளரவமும் எள்ளளவும் குறைய பூமிபால் அனுமதிப்பதில்லையாம். அதற்கு சாட்சியாக அரச குடும்பத்தின் குரூப் ஃபோட்டோ ஒன்றைக் காட்டினார்கள்.

அதில் ராஜா இருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் ராணி. ராணிக்குப் பக்கத்தில் ஓர் இடம் காலியாக விடப்பட்டுள்ளது. அப்புறம் இளவரசிகளின் வரிசை.

“இந்தக் காலி இடத்தில் நின்றிருக்க வேண்டியவர் யார்? அவர் எங்கே?” என்று கேட்டேன்.

“ராணிக்கு அடுத்து மூத்த மகள் நிற்க வேண்டிய இடம் அது. ஆனால் அவரோ அரச குடும்பத்திலிருந்து சாதாரண ஒருவரை மணம் புரிந்து கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். அதனால் அவரை அரச குடும்பத்திலிருந்து விலக்கி விட்டார்கள். அரச குடும்ப குரூப் போட்டோவை எங்கே பார்த்தாலும் அதில் மூத்த மகள் நிற்க வேண்டிய இடம் காலியாகவே

இருக்கும்” என்று விளக்கம் கொடுத்தார் கய்டு அபிதீன்.

37
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/36&oldid=1075205" இருந்து மீள்விக்கப்பட்டது