பக்கம்:தாய்லாந்து.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சங்மாயில் இறங்கியதும் எங்கள் பெயர்கள் எழுதப்பட்ட அட்டையைக் கையில் எத்திக் கொண்டு நின்றிருத்தாள் இன்னொரு தாய்லாந்து அழகி. எங்களை வரவேற்று ஒரு காரில் அழைத்துச் சென்றாள்.

“இப்போது நாம் பாரடைஸ் கஸ்ட் ஹவுஸ் போகிறோம். அங்கேதான் குளியல், காலை உணவு எல்லாம். அப்புறம் முக்கிய இடங்களைப் பார்க்கப் போகிறோம்” என்று அவள் அறிவித்துக் கொண்டிருந்தபோதே கஸ்ட்ஹவுஸ் தெருங்கிவிட்டது.

மெதுவாக என்று தாய்லாந்தில் எந்தக் காரியமும் நடப்பதில்லை. எல்லாமே வேகம்தான்.

காரைவிட்டு இறங்கி கஸ்ட் ஹவுஸ் ரிஸப்ஷன் ஹாலுக்குள் போவதற்குள் அந்தப் பெண்மணி எங்கள் அறையின் சாவியைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் ரெடியாகிக் கீழே வந்தபோது வெள்ளைக்காரர் போல ஒருவர் எங்களை நோக்கி வந்து கை குலுக்கினார்.

“நான் சொம்பட். உங்கள் கய்டு. போவோமா” என்றார்.

இப்போது அவரே டிரைவர்.

காரில் போகும்போது நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வி: “உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்”

“மேங்கோல் சொம்பட். சிலர் சுருக்கமாக ‘ஸாம்’ என்றும் அழைப்பார்கள்.”

“ தமிழில் சம்பத் என்பது போல ஒலிக்கிறது அல்லவா!” என்றார் ஸ்ரீவே. எங்கேயாவது இதுபோன்ற சொற்களைக் கேட்டால் உடனே ஆராய்ச்சியில் இறங்கி விடுவார் அவர்.

“என்ன சொல்கிறார் உங்கள் நண்பர்?” என்று ஸ்ரீவேணு கோபாலனைச் சுட்டிக் காட்டிக் கேட்டார் கய்டு.

“எங்கள் ஊரில் சம்பத் என்று பெயர் உண்டு. உங்கள் பெயரும் கிட்டத்தட்ட அது மாதிரி ஒலிக்கிறது. சம்பத் என்றால் தமிழில் ‘செல்வம்’ என்று பொருள்” என்று சொன்னேன்.

அவர் முகம் பிரகாசமாயிற்று!

“உங்களுக்குத் தெரியுமா?” எங்கள் தாய்லாந்து மொழியி-

48
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/46&oldid=1075209" இருந்து மீள்விக்கப்பட்டது