பக்கம்:தாய்லாந்து.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பகுதியில் உள்ள மிக முக்கியமான நகரம். ‘வடக்கின் ரோஜா’ என்று அதை வர்ணிக்கிறார்கள். அங்கு வாழும் பெண்களின் மேனியும் அப்படித்தான் இருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி உயரம். சில்லென்ற குளிர் நம்மைக் கவ்விப் பிடிக்கிறது. பல்வேறு பட்சிகளின் இனிய இங்கிலீஷ் ‘நோட்'டுகள்.

இயற்கையோடு ஹாயாக உறவாடி அதன் அழகை ரசிக்கிறோம். தூய்மையை சுவாசிக்கிறோம்.

தாய்லாந்து ஸில்க், நுணுக்கமான வேலைப்பாடுகள் மிக்க வெள்ளிச் சாமான்கள், அழகு விசிறிகள், வண்ணக் குடைகள் எல்லாமே உலகப் பிரசித்தம்.

குடைகளின் கம்பிக் கூரையில் துணிகளைப் பதித்து அவற்றின் மீது தூரிகையால் வெவ்வேறு டிசைன்களில் பூக்கள் வரையும் பெண்களின் கைவிரல் வேகத்தை நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

ஓரிடத்தில் காரை நிறுத்தினார்கள். “தாய்லாந்து ஸில்க்குக்கு உலகமெங்கும் ஏக டிமாண்ட். பட்டு தயாரிக்கும் தொழிலில் இங்கே பல குடும்பங்கள் ஈடுபட்டிருக்கின்றன. அவற்றில் மிகத் தொன்மையான குடும்பம் வசிக்கும் ஒரு வீட்டின் வாயிலில்தான் இப்போது நின்று கொண்டிருக்கிறோம். உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு வாசலிலேயே நின்று விட்டார் சொம்பட்.

பட்டுப் பூச்சிகளைக் கொதி வெந்நீரில் போடுவதில் தொடங்கி, பட்டுத்துணியில் டிசைன் போடுவது வரை அவ்வளவையும் அந்த வீட்டுக்குள் ஒரு கண்காட்சி போலப் பார்க்கலாம். சுற்றுலாப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சி அல்ல இது. ஒரு குடும்பத்தின் தினசரி நடவடிக்கையையே இப்படி கண்காட்சியாக்கி இருக்கிறார்கள்.

முகத்தில் சுருக்கம் நிறைந்த பாட்டியிலிருந்து பழம் போல் அழகு மேனியுடன் காணப்பட்ட கொள்ளுப்பேத்திவரை ஆளுக்கொரு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரோடும் பேசுவதில்லை. இம்மாதிரி குடும்பங்கள் சங்மாய் முழுதும் மண்டிக் கிடக்கின்றன.

50
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/48&oldid=1075212" இருந்து மீள்விக்கப்பட்டது