பக்கம்:தாய்லாந்து.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


7

 ”ளம் பெண்கள் பணம் சம்பாதிக்க பாங்காக் போவது வடக்கிலிருந்து மட்டும்தானா, இல்லை...” என்று இழுத்தேன்.

”இதில் வடக்கு, கிழக்கு, என்றெல்லாம் கிடையாது. வறுமை என்று வந்து விட்டால், அவர்கள் எந்தப் பகுதியிலிருந்தாலும் போக வேண்டியதுதானே! எனக்குத் தெரிந்த இரண்டு குடும்பங்கள் இப்போது இங்கே சங்மாயில் குடியேறியுள்ளனர். அவர்கள் பக்கத்து கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய பெண்கள் கூட பாங்காக் போயிருப்பவர்கள்தான். அந்தக் குடும்பத்தினரைப் பார்த்து விவரமாகப் பேசலாம். வருகிறீர்களா?” என்று கேட்டார் சொம்பட்.

”இப்போதே போகலாம்” என்று புறப்படத் தயாரானோம் நாங்கள்.

”மரச் சாமான்கள் நிறுவனம் ஒன்றைப் பார்க்க இப்போது நாம் போகப் போகிறோம். அதற்கு முன்பாக வழியில் இவர்களைப் பார்த்துவிட்டுப் போய்விடலாம்” என்றார் சொம்பட்.

”மரக்கடையில் நமக்கென்ன வேலை?” என்றேன்.

”அது சாதாரண மரக்கடை அல்ல. மிகப் பெரிது. மரத்தில் அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். கலை அழகு மிக்க சிற்ப வேலைப்பாடுகள்!” என்றார் சொம்பட்.

முதலில் உசன் டவுட்டா என்பவர் தங்கியிருந்த வீட்டுக்குப் போனோம். அங்கே உசன் டவுட்டாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சொம்பட்.

மெலிந்த தேகம். லேசாகச்சுருக்கங்கள் விழுந்துள்ள முகம். உசன் டவுட்டா சட்டென்று எங்களுடன் பேச உடன்பட

52
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/50&oldid=1075214" இருந்து மீள்விக்கப்பட்டது