பக்கம்:தாய்லாந்து.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

 வில்லை. கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தார். கல்லில் நார் உரிக்க வேண்டும் போலிருந்தது.

சொம்பட் அவரோடு சற்று நேரம் ஏதோ கிசுகிசுத்து விட்டு என்னிடம் வந்தார்.

“என்னவாம்?” என்றேன்.

“என் குடும்பத்தைப் பற்றி இவர்கள் எதற்காக விசாரிக்கிறார்கள் என்று சந்தேகமாய்க் கேட்கிறார்” என்றார் சொம்பட்.

“நீங்கள் அதற்கு என்ன பதில் சொன்னீர்கள்?”

“அவர்களெல்லாம் இந்தியாவிலிருந்து வந்துள்ள பத்திரிகைக்காரர்கள். இங்கே நமது வாழ்க்கை முறை, கலாசாரம் பற்றி யெல்லாம் எழுதப் போகிறார்கள். இவர்களிடம் சொல்வதில் தப்பில்லை என்று நான் தெளிவுபடுத்தி விட்டு வந்திருக்கிறேன். நீங்கள் போய்ப் பேச ஆரம்பித்தால் சரியாகி விடுவார்” என்றார்.

முகத்தில் சிரிப்பு காட்டாமல் சிறிது நேரம் இறுக்கமாகவே இருந்தார் டவுட்டா. (ரொம்பவும் பொருத்தமான பெயர்தான். எங்களைப் பற்றிக் கடைசி வரை ‘டவுட்டா’கவே இருந்தார்) முதலில் எங்கள் கேள்விகளுக்குத் தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தார். அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பேசத் தொடங்கினார்.

53
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/51&oldid=1075215" இருந்து மீள்விக்கப்பட்டது