பக்கம்:தாய்லாந்து.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf
ஹுமாயூன்

“அவள் ஏதாவது பணம் கொடுத்தாளா?”

“பதினைந்தாயிரம் பாட் இங்கேயே கொடுத்து விட்டுப் போய்விட்டாள்.“

“அப்படியானால் நீங்கள் உங்கள் பெண்ணைக் காசுக்கு விற்றிருக்கிறீர்கள். அப்படித்தானே?”

உசனின் முகம் சிவந்து, கோபம் தெரிந்தது.

“இன்னொரு தரம் இதுபோல் சொல்லாதீர்கள். நான் என் பெண்ணை விலை பேசவில்லை. எங்கள் குடும்ப நிலை கண்டு மனம் பொறுக்காமல் அவளே எடுத்த முடிவு இது. நான் வேண்டாமென்று தடுத்திருந்தாலும் அவள் என் பேச்சைக் கேட்டிருக்க மாட்டாள். வீட்டை விட்டே ஓடியிருப்பாள். வேறு வழி இல்லாமல்தான் நானும் சம்மதித்தேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/53&oldid=1075218" இருந்து மீள்விக்கப்பட்டது