பக்கம்:தாய்லாந்து.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

“அதோ பாருங்கள்“ என்று சற்று தூரத்தில் கும்பலாய்த் தெரிந்த சிலரைச் சுட்டிக் காட்டினார்.

அவர் காட்டிய இடத்தில் பர்மூடா ஸ்டைல் அரை நிக்கர்களில் நாலைந்து ஐரோப்பியப் பெண்கள் நின்று கொண்டிருக்க அவர்கள் இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொள்ள பெட்ஷீட், போன்ற துணியைக் கொடுத்துக் கொண்டிருந்தார் அந்தக் கோயிலைச் சேர்ந்த ஒருவர்.

அதைக் கட்டிக் கொண்டால் உள்ளே போகலாமாம்.

அந்தப் பெண்கள் ஒரு வழியாக தத்தக்கா பித்தக்கா என்று பெட்ஷீட்டைக் கட்டிக் கொண்டு உள்ளே போனார்கள்.

தாய்ஸ் உதேப் கோயில் உருவான விதமே தனி, புத்தர் பெருமானின் எலும்பு ஒன்றை இங்கே கொண்டு வந்து வைத்து அதன் மீது கோயில் கட்ட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்-

61
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/59&oldid=1075221" இருந்து மீள்விக்கப்பட்டது