பக்கம்:தாய்லாந்து.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.1

சிங்கப்பூர் ‘சாங்கி’ விமான கூடத்தைக் காட்டிலும் சிறப்பான இன்னொரு கூடத்தை இப்போது கட்டி முடித்திருக்கிறார்கள். அது எங்கே என்றால் சிங்கப்பூரிலேயேதான். அதுவும் முதல் விமான கூடத்துக்குப் பக்கத்திலேயேதான். தூய்மையிலும், துல்லியத்திலும் அண்ணன் தம்பிக்குள் போட்டா போட்டி!

சிங்கப்பூரிலிருந்து பாங்காக் போய்ச் சேர மூன்று மணி நேரம் என்றால், பாங்காக் விமான கூடத்திலிருந்து ஹோட்டலுக்குப் போய்ச் சேர ஏறத்தாழ அவ்வளவு நேரம் ஆகி விடுகிறது. அப்படியொரு போக்குவரத்து நெரிசல், சாலை முழுதும் கார்களும் ஆட்டோக்களும், டிரக்குகளும் இரண்டு சக்கர ஹோண்டா வகையறாக்களும் நிரம்பி வழிகின்றன. எங்கள் டாக்ஸி டிரைவர் சரளமாய் இங்கிலீஷ் பேசினார்.

“தாய்லாந்தில் வாகனங்கள் அதிகமோ?” என்று அவரிடம் கேட்டேன்.

“ஆமாம்; வாகனங்களின் எண்ணிக்கைக்கு அடுத்தது புத்தர் சிலை பாபுலேஷன்!” என்றார் அவர்.

பாங்காக்கில் நீண்ட நெடிய கட்டிடங்கள் விண்முட்டி நிற்கின்றன. மொட்டையாக நிற்கும் அந்தக் கட்டிடங்களுக்கு இடையே கூர் கூரான புத்தர் ஆலயங்கள் உயர்ந்து நிற்கின்றன.

7
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/6&oldid=1075177" இருந்து மீள்விக்கப்பட்டது