பக்கம்:தாய்லாந்து.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கூண்டைக் கையில் ஏந்திக் கொண்டு நின்ற சிலர் கண்களை மூடி ஏதோ தியானம் போல் செய்துவிட்டு அந்தக் கூண்டைத் திறக்கவும் அந்தக் குருவிகள் விடுதலை பெற்று வானில் பறக்கின்றன.

“என்ன இது?“ என்று கய்டைக் கேட்டேன்.

“மலையடிவாரத்தில் இந்தப் பறவைகளைக் கூண்டோடு விற்பனை செய்கிறார்கள். அதைச் சிலர் விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து ஏதேனும் ஒரு காரியம் கைகூட வேண்டுமென வேண்டிக் கொண்டு கூண்டைத் திறந்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் வேண்டிக் கொண்ட காரியம் நிறைவேறும் என்பது தாய்லாந்துக்காரர்களின் நம்பிக்கை” என்றார் சொம்பட்.

“சரி, இங்கே தாய்லாந்து மக்களை விட மற்ற நாட்டு மக்கள்தானே அதிகமாக இருக்கிறார்கள்?”

“கய்டுகள்“ இப்படிச் செய்யுங்கள் என்று பயணிகளுக்குச்

தாய்லாந்து.pdf
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/65&oldid=1075255" இருந்து மீள்விக்கப்பட்டது