பக்கம்:தாய்லாந்து.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சொல்வார்கள். அல்லது பயணிகளே புத்தகம் எதிலாவது இந்த நம்பிக்கை பற்றிப் படித்து விட்டு வந்திருப்பார்கள்.”

“நீங்கள் மட்டும் ஏன் எங்களிடம் இதைச் சொல்ல வில்லை” என்று கேட்டேன்.

இது ஒரு மூட நம்பிக்கைதான். எதையோ சொல்லிப் பறவைகளை விற்க வேண்டும். ஒரு வியாபார யுக்தி. எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. எனவேதான் நான் இதைப் பற்றி யாரிமும் விவரிப்பதில்லை”

சாங்மாய் புறப்படுமுன் நண்பர் சொம்பட் அவசர அவசரமாக மலர்ச்செண்டு விற்கும் கடையை நோக்கி விரைந்தார்.

சில வினாடிகளில் அழகாக ‘பாக்’ செய்யப்பட்ட மலர்க் கொத்து ஒன்றைக் கையோடு கொண்டு வந்தார்.

“திஸ் இஸ் ஃபார் மை கேர்ள் ஃப்ரண்ட்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

“ஓ! உங்களுக்கு கேர்ள் ஃப்ரண்ட் இருக்கிறாளா!”

“எஸ்; நான் அவளை வெகுவாக நேசிக்கிறேன். அடுத்த ஆண்டு திருமணம். இதோ பாருங்கள்” என்று தன் பர்ஸைத் திறந்து அதிலிருந்த அந்தப் பெண்ணின் போட்டோவைக் காட்டினார்.

கள்ளம் கபடின்றி வெளிப்படையாகப் பேசுவது தாய்லாந்து மக்களின் பண்புகளில் ஒன்று.

பாங்காக் நண்பர் ஒருவர் சொன்னது எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

“இந்த நாட்டு மக்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுவார்கள். நான் இங்கே வந்த புதிதில் என் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருத்தியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்தக் கம்பெனியில் நான் அப்போதுதான் சேர்ந்திருந்தேன். ஒருநாள் அந்தப் பெண், ரொம்பச் சோர்வாகக் காணப்பட்டாள். ‘ஏன் சோர்வாக இருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?’ என்று கேட்டேன்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. வழக்கமான சோர்வுதான். இப்போது எனக்கு மாதத் தொந்தரவு. மூன்று நான்கு நாட்கள் இப்படித்தான் இருக்கும். அப்புறம் சரியாகிப் போய்விடும்’ என்று வெகுளியாகச் சொன்னாள்.”

68
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/66&oldid=1075256" இருந்து மீள்விக்கப்பட்டது