பக்கம்:தாய்லாந்து.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

வர்களே இல்லை. நான் சந்தித்த எல்லாத் தமிழ்ப் பிரமுகர்களுமே முதல் கேள்வியாக ‘மறைக்காடனைப் பார்த்து விட்டீர் களா?’ என்று கேட்கத் தவறவில்லை.

ஏற்கனவே, மறைக்காடன் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திப்பு நேரம் கேட்டிருந்தோம்.

“போன் செய்துவிட்டு நானே வந்து தங்களைச் சந்திக்கிறேன்” என்று அவர் சொல்லியிருந்தார்.

அந்தச் செய்திதான் இப்போது வரவேற்பறையில் காத்திருந்தது.

மறைக்காடன் எனும் இத்தனை சுத்தமான தமிழ்ப் பெயருக்கு ஏதேனும் பின்னணி இருக்க வேண்டும் என்று தோன்றியது. அவர் யார் என்கிற விவரம் தெரிந்ததும் அந்தப் பெயரின் பின்னணியும் புரிந்தது.

தமிழ் மொழியோடு இணைந்து வாழ்ந்த அற்புதமான ஒரு குடும்பத்தின் வாரிசுதான் மறைக்காடன்!

71
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/69&oldid=1075259" இருந்து மீள்விக்கப்பட்டது