பக்கம்:தாய்லாந்து.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf
மறைக்காடன்

விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்த லட்சியத்துக்காகவே தம் இரண்டாவது மகள் நந்தினியை சென்னை எத்திராஜ் கல்லூரியில் படிக்க வைத்திருக்கிறார். நந்தினி இறுதியாண்டு எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு மகள், மூத்தவர். திருமணமாகிக் கணவருடன் இல்வாழ்க்கை நடத்தி வருகிறார்.

மிகச் சிறந்த வங்கியாளர் என்பதால் பாங்காக்கில் இருந்தபடியே இந்தியப் பொருளாதாரத்தின் நாடியைப் பிடித்துப் பார்க்க முடிகிறது. இவரால்.

“ஏட்டுச் சுரைக்காய் கொள்கைகளுக்கு இந்தியா உடனடியாக விடை கொடுத்து அனுப்பிவிட வேண்டும். கறிக்குதவும் சிந்தனைகளுக்கு மட்டுமே செயல்வடிவம் தர வேண்டும்.

80
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/78&oldid=1075268" இருந்து மீள்விக்கப்பட்டது