பக்கம்:தாய்லாந்து.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

பாங்காக்கில் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அஸ்திவாரம் போடும் போது பூமிக்கடியில் பிரம்மாவின் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாம். அதை அந்த ஓட்டல் வாசலிலேயே (நாலு வீதிகள் கூடுகிற இடம்) கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள்.

தாய்லாந்தில் பிரம்மாக்கள் அதிகம் பிரம்மாவுக்கு வழிபாடும் அதிகம். இசை மூலம் வழிபடுகிறவர்களும் உண்டு.

சங்கீதக்காரர்கள் அங்கே கோயிலுக்கருகிலேயே தயாராக உள்ளனர். பணம் கொடுத்தால் பாடுகிறார்கள். அதே போல் நடனக்காரர்களும் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் ஆடுகிறார்கள்.

பாங்காக்கில் எனக்கொரு நெருங்கிய நண்பர் இருக்கிறார். பெயர் ஹுமாயூன். ஹாங்காங் ‘ஜெம்’ மர்ச்செண்ட் டாக்டர் அயூப் அவர்களின் மூத்த சகோதரர். நான் மந்திர் என்றால் அவர் மஸ்ஜித், எங்களுக்குள் இருக்கும் நல்லுறவு இந்து முஸ்லிம் நல்லிணக்கத்துக்கு ஓர் எடுத்துக் காட்டு.

“இங்கே ஒரு அயோத்தி இருக்கிறதே, தெரியுமா?” என்று கேட்டார் ஹுமாயூன்.

9
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/8&oldid=1075179" இருந்து மீள்விக்கப்பட்டது