பக்கம்:தாய்லாந்து.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தொடங்கி வைக்கும் சடங்குகளை நடத்தி வைப்பதும் இவர்கள் தான்.”

திருப்பாவை, திருவெம்பாவை பற்றி மறைக்காடன் குறிப்பிட்ட போது காஞ்சிப் பெரியவர் தம்முடைய அருள் வாக்கில் சொல்லியுள்ள ஒரு செய்தியை அப்படியே நினைவு படுத்திக் கொண்டேன்:

“ஹிந்து நாகரிகச் செல்வாக்கானது பல தேசங்களில் குறிப்பாக கீழ்த்திசை நாடுகளில் ஜீவகளையுடன் ஏற்பட்டது ஒரு நிலை. இந்தக் காலகட்டத்தில்தான் அங்கோர் வாட், பேரா புதுர், ப்ரம்பானன் போன்ற பெரிய பெரிய தமிழ்நாட்டுக் கோவில்கள் அங்கே எழும்பின. இந்த கட்டத்தில்தான் நம்முடைய திருப்பாவையும், திருவெம்பாவையும் கூட ஸயாமுக்குச் சென்றிருக்கின்றன.

தாய்லாந்து.pdf
82
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/80&oldid=1075270" இருந்து மீள்விக்கப்பட்டது