பக்கம்:தாய்லாந்து.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

தூங்கப் போய் காலையில் பதினொரு மணிக்குத்தான் எழுந்திருப்பார். அவர் வழியே தனி’ என்றார்.

“இந்த ஊரில் பழமையான மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறதே, அதைப் போய்ப் பார்த்தீர்களா?” என்று கேட்டார் மறைக்காடன்.

“இல்லை; நாளைக்குத்தான் பார்க்கப் போகிறோம்.”

இப்போது மாரியம்மன் ஆலயத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திருப்பணியில் மறைக்காடனின் பங்கும்,உதவியும் மிக அதிகம் என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். அதைப்பற்றி விசாரித்த போது, “ஏதோ என்னால் முடிந்த அளவு அணில்பிள்ளை பங்கு!” என்றார் அடக்கமாக,

றுநாள், பொங்கல் திருநாள்.

84
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/82&oldid=1075272" இருந்து மீள்விக்கப்பட்டது