பக்கம்:தாய்லாந்து.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12

நாங்கள் ஓட்டலில் தங்கியிருந்த நாட்களில் நண்பர் ஹுமாயூன், எங்களை வேறு எங்கும் சாப்பிட விடவில்லை.

காலை ஆறுமணிக்கெல்லாம் அவர் வீட்டிலிருந்து பெட் காபி வந்து எங்கள் அறைக் கதவைத் தட்டும். பிறகு குளித்து முடிவதற்குள் இட்லி தோசை அதை அடுத்து போன் கால், ஹுமாயூன்தான் பேசுவார்.

“இன்றைக்கு எங்கே போகப் போகிறீர்கள்?”

நாங்கள் எங்கே போகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி உணவு தயார் செய்து அழகான அட்டைப் பெட்டிகளில் ‘பாக்’ செய்து அனுப்பி விடுவார்.

ஹுமாயூன் மயிலாடுதுறையில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகன் சுந்தரை (பிராம்மண இளைஞர்) பாங்காக்குக்கு அழைத்துப் போய் தம்முடைய ‘பெனின்ஸுலா கலர் ஸ்டோன் கம்பெனி’யில் வேலையில் அமர்த்தியிருக்கிறார்.

நீடூர் நஸிம் சகோதரர்களில் ஒருவரான ஹுமாயூனிடம் எனக்குப் பிடித்த அம்சம் அவரது ஒழுக்கம். வசதியாக இருக்கிறோம் என்பதற்காக ஊதாரித்தனத்துக்கோ துர்ப் பழக்கங்களுக்கோ அவர் தம்மை அடிமையாக்கிக் கொள்ளவில்லை. சகோதரர்கள் நால்வருமே தனித்தனியாக ஜெம் வியாபாரம் செய்து வந்த போதிலும் மிக ஒற்றுமையோடு வாழ்கிறார்கள். நாலுவிதமான கற்கள் ஓர் ஆபரணத்தில் சேர்ந்து ஜொலிப்பதைப் போல விசேஷ நாட்களில் எல்லோரும் ஒன்றாய்க் கூடி மகிழ்கிறார்கள்.

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/90&oldid=1075280" இலிருந்து மீள்விக்கப்பட்டது