பக்கம்:தாய்லாந்து.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

“அரிசி மீது இவ்வளவு அக்கறை காட்டும் அந்த மக்கள் அதே அக்கறையை உயிரைக் குடிக்கும் ஓபியெம் செடிகளை வளர்ப்பதிலும் காட்டுகிறார்களே, அதுதான் விந்தையாக இருக்கிறது!“ என்றேன்.

“பெரும்பாலும் இந்த போதை மருந்துச்செடிகள் பயிரிடப்படுவது வடக்கு தாய்லாந்தில்தான். அந்த மலைக்காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் மொத்தம் மூன்று லட்சம் பேர் என்றால் அவர்களில் இரண்டு லட்சம் பேரின் வயிற்றுப் பிழைப்பே இந்த ஓபியம் செடிகள் பயிரிடுவதுதான்” என்றார் சொம்பட்.

“அரசு இதை ஏன் தடை செய்யாமல் விட்டு வைத்திருக்கிறது?“ என்ற என் கேள்விக்குச்சரியான பதில் யாராலும் சொல்ல

94
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/93&oldid=1075283" இருந்து மீள்விக்கப்பட்டது