பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

மக்சீம் கார்க்கி


ஆமாம்! சரி — அந்த மனிதனின் பெயர் என்ன சொன்னாய்? இகோர் இவானவிச், இல்லையா?”

அவள் மாலையில் வெகு நேரங் கழித்துக் களைத்து ஓய்ந்து திரும்பி வந்து சேர்ந்தாள்; எனினும் அவள் உள்ளத்தில் களிப்பே நிறைந்திருந்தது.

“நான் சாஷாவைப் பார்த்தேன்” என்று தன் மகனைப் பார்த்துச் சொன்னாள். “அவள் உனக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கச் சொன்னாள். அந்த இகோர் இவானவிச் படாடோபமே இல்லாத பேர்வழி; சிரிக்கச் சிரிக்க வேடிக்கையாகப் பேசுகிறான். அவன் பேசுவதே ஒரு விநோதமாயிருந்தது!”

“அவர்களை உனக்குப் பிடித்துப் போனதுபற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

“அவர்கள் எல்லாருமே ஆடம்பரம் இல்லாதவர்கள்தான், “பாஷா தடபுடல் இல்லாதபடி பழகுவதுதான் நல்ல குணம் இல்லையா? உன்மீது அவர்களுக்கு ஒரே மதிப்பு”

திங்கட்கிழமையன்றும் பாவெலுக்கு உடல்நிலை சீராகவில்லை; எனவே அன்றும் அவன் வீட்டிலேயே தங்கிவிட்டான். மத்தியானச் சாப்பாட்டு வேளையில் பியோதர் மாசின் குதூகலம் பொங்கும் உணர்ச்சியோடு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க, ஓடோடியும் வந்து சேர்ந்தான்.

“புறப்படு உடனே புறப்படு! தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிற்கிறார்கள். அவர்கள் உன்னை உடனே அழைத்து வரச்சொன்னார்கள், நீ வந்தால்தான் எல்லாவற்றையும் விவரமாக எடுத்துச் சொல்லுவாய் என்று சிஸோவும் மாகோதினும் கூறினார்கள். வந்து பார்!”

பாவெல் பதிலொன்றும் பேசாமல், உடைமாற்றிக்கொள்வதில் முனைந்தான்.

“பெண்களும் கூடக் கூடிவிட்டார்கள்; அவர்கள் அனைவரும் ஒரே கூச்சல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

“நானும் வருகிறேன்” என்றாள் தாய். “அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இரு, நானும் வருகிறேன்.”

“வா சீக்கிரம்!” என்றான் பாவெல்.

அவர்கள் மூவரும் தெருவழியே விரைவாகவும் மௌனமாகவும் நடந்தனர். தனக்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பரவசத்தினால், தாய்க்கு