பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

மக்சீம் கார்க்கி


“வேனலக்குப் போகாதே என்றால்.... வேலை நிறுத்தமா?”

“எதற்காக? கேவலம் ஒத்தைக் காசுக்காகவா?”

“ஏன், வேலை நிறுத்தம் செய்தால் என்ன?”

“நம்மையெல்லாம் சுட்டுத் தள்ளிவிடுவான்!”

“அப்புறம் அவனுக்கு வேலை பார்க்க ஆள் ஏது?”

“ஆளா கிடைக்காது? எத்தனையோ பேர் தயாராக முன் வருவார்கள்!”

“கருங்காலிகள்!”

13

பாவெல் கீழே இறங்கிவந்து தன் தாயருகே நின்றான்.

கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது; ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக்கொண்டார்கள்: ஆலேசமாகக் கூச்சலிட்டுக்கொண்டார்கள்.

ரீபின் பாவெலிடம் வந்து சொன்னான்: “இவர்களை நம்பி நீ வேலை. நிறுத்தம் செய்ய வைக்க முடியாது. எல்லாரும் பேராசைக்காரர்கள்தான், காசை விடமாட்டார்கள். ஆனால், கோழைகள். தைரியமில்லாதவர்கள்! முன்னூறு பேர்கூட உன்னைப் பின்பற்ற மாட்டார்கள். ஒரு வண்டிக் குப்பையையும் ஒரே சுமையிலே அகற்றிவிட முடியுமா?....”

பாவெல் பதில் பேசவில்லை. அவனுக்கு முன்னால் திரண்டு நிற்கும் கரிய முகங்களின் பலஜோடிக் கண்களும் அவனையே ஆழ்ந்து நோக்கி அலைபாய்ந்து கொண்டிருந்தன. அவனது இதயம் அதிர்ச்சியால் படபடத்தது. வறண்ட பூமியின்மீது விழுந்த சிறு தூற்றலைப்போல, தன்னுடைய பேச்சு எந்தவிதப் பலனும் இல்லாமல் எங்கோ காற்றோடு கரைந்து போய்விட்டது போல அவனுக்குத் தோன்றியது.

அவன் களைத்துப்போய்த் தலையைத் தொங்கப் போட்டவாறே வீட்டுக்குத் திரும்பினான். அவனுக்குப் பின்னால், அவரது தாயும் சிலோவும் வந்து கொண்டிருந்தார்கள். பின் அவனுக்குப் பக்கமாக வந்து, அவனது காதில் ஏதோ குசுகுசுத்தான்.

“நீ நன்றாகத்தான் பேசுகிறாய், ஆனால், உன் பேச்சு இதயத்தைத் தொடவில்லை. ஆமாம், நீ அவர்களது இதயங்களைத் தொடுகிற மாதிரிப் பேசவேண்டும்! இதயத்தின் மத்தியிலேதான் தீப்பொறி