பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

மக்சீம் கார்க்கி


அன்று முழுதும் பாவெல் களைப்போடும், சோர்வோடும் மனச்சஞ்சலத்தோடும்தான் உலவித் திரிந்தான்; அவனது பிரகாசமான கண்கள் எதையோ தேடித் திரிவதுபோலத் தெரிந்தன. தாய் இதைக்கண்டு கொண்டாள்.

“என்ன விஷயம். பாஷா!” என்று ஜாக்கிரதையோடு கேட்டாள்.

“தலை வலிக்கிறது” என்றான் பாவெல்.

“படுத்துக்கொள். போய் வைத்தியரை அழைத்து வருகிறேன்.”

“வேண்டாம், வீணாய்ச் சிரமப்படாதே” என்று அவன் அவசரப்பட்டுப் பதில் சொன்னான். பிறகு அவன் தாயிடம் அடிமூச்சுக் குரலில் சொல்ல ஆரம்பித்தான்:

“நான் மிகவும் இளையவன்; மிகவும் பலவீனமானவன். அது தானம்மா தொல்லை! அவர்கள் என்னை நம்பவில்லை; என் கொள்கையை ஏற்கவில்லை–அதாவது–என் கொள்கையை அவர்களுக்கு எப்படி எடுத்துச்சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அம்மா, என் மனம் நொந்து போய்விட்டது; எனக்கு என்மீதே கசப்பேற்பட்டுவிட்டது.”

அவனது சிந்தனை தேங்கிய முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் அவள்; பிறகு அவனைத் தேற்ற முனைந்தாள்:

“கொஞ்சம் பொறுத்திரு” என்று மெதுவாகச் சொன்னாள்; “இன்றைக்கு அவர்கள் தெரிந்துகொள்ளாது போனதை நாளைக்கு நிச்சயம் தெரிந்துகொள்ளத்தான் போகிறார்கள்.”

“அவர்களுக்குத் தெரிந்துதான் ஆகவேண்டும்!” என்றான் பாவெல்.

“நீ சொல்வதுதான் சரி என்பது எனக்குக்கூடத் தெரிகிறது.” பாவெல் தாயருகே நெருங்கிச் சென்றான்.

“அம்மா, நீ ஒரு அற்புதப்பிறவி.....” என்று கூறிவிட்டுத் திரும்பி நடந்தான். அந்த மென்மையான வார்த்தைகளால் சூடுபட்டவள் போலத் துணுக்குற்ற அவள், கைகளால் இதயத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, அதனுடன் தன் மகனின் பரிவுணர்ச்சியையும் சுமந்துகொண்டு, அங்கிருந்து வெளியேறினாள்.

அன்றிரவு அவள் படுத்துத் தூங்கிய பிறகு, பாவெல் படுக்கையில் படுத்தவாறே ஏதோ படித்துக்கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில், போலீஸ்காரர்கள் வந்து சேர்ந்தார்கள், வீட்டிலுள்ள சகல சாமான்களையும் தாறுமாறாக இழுத்தெறிந்து சோதனை போட்டார்கள். கூரை மீதும், வெளி முற்றத்திலும் தேடினார்கள். அந்த மஞ்சள் மூஞ்சி