பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

x

என்னும் பெண்மணியை வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்தெடுத்தார். 1898ல் “படங்களும் கதைகளும்” தொகுதிகள் வெளிவந்தன, அவர் டிப்லிஸ் நகரில் இருந்தபோது சமூக ஜனநாயக அமைப்புடன் தொடர்புகொண்டு இருந்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். புகழ்பெற்ற வரலாற்றாளர் கிப்பன்ஸ் (Gibbons) என்பவருடைய ரோமானியப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்னும் நூலைப் படித்தார். சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தொடர்ந்து காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தார்.

1899ல் அவருடைய “பாமா கோர்தயேவ்” என்னும் நாவல் வெளிவந்தது. 1990ல் லியோடால்டாயைச் சந்தித்துக் கருத்து பரிமாறிக்கொண்டார். 1901ஆம் ஆண்டு புரட்சி இயக்கத்தில் மிக தீவிரமாகப் பங்குபெற்றார். அறிவியல் கழகம் அவரை உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டது “பெட்டிபூர்ஷ்வா” என்னும் நாவல் 1902இல் வெளிவந்தது. தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாக அரசு அவரை அர்சமஸ் நகருக்கு கடத்திற்று. “சோர்மோவோ” தொழிலாளர்கள் கிளர்ச்சியில் பங்கு பெற்றார். நிஜினி நோவோகார்டில் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் தீவிரமாக நடைபெற்றது. அதே ஆண்டு மாஸ்கோ கலையரங்கில் அவருடைய “அடிஆழம்” “கோடை மக்கள்” என்ற நாவல்கள் நாடகமாக அரங்கேற்றப்பட்டன. 1903ல் தீவிர பொல்ஷிக் அனுதாபி ஆனார்.

1905ல் போராட்டத்தில் திரண்டிருந்த தொழிலாளர்களுக்கும் ஜார் படைவீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் என்று அஞ்சி ரெட்ஸென்ஸ்கி என்னும் உள் விவகாரத் துணை அமைச்சரிடம் அறிவாளிகள் குழுவுக்குத் தலைமை தாங்கி நடத்திச் சென்று விண்ணப்பம் தந்தார். அது தோல்வியில் முடிந்தது. போலிஸ் காவலர்கள் தொழிலாளர்களை நரவேட்டை ஆடினார்கள், இதனை “ரத்த ஞாயிறு” என்பர். அது கார்க்கியை மேலும் தூண்டிற்று. இதனால் பலமுறை சிறைப்பட்டார். சிறையில் “கதிரவன் குழந்தைகள்” எழுதினார். 1905ஆம் ஆண்டில் போல்ஷிவிக் கட்சி உறுப்பினரானார்.