பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xi

ரஷ்யப்புரட்சி நிலைமையை அமெரிக்க மக்களுக்கு விளக்கிச் சொல்ல 1906ஆம் ஆண்டு போல்ஷிவிக் கட்சி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பியது. மனைவி உடன்வர அமெரிக்கா சென்றார். அமெரிக்காவிலிருந்த ரஷ்யப் பிரதிநிதியும் ஜாரின் அடிவருடிகளும் அவரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர். பலிக்கவில்லை, எச்.ஜி.வெல்ஸ், எர்னஸ்ட் ரூதர்போர்டு, வில்லியம் ஜேம்ஸ் தொடர்பு கிடைத்தது. இதன் விளைவாக கார்க்கி நாடு திரும்பிய பின் ஆப்பிள்டன் மேகஜின் ‘தாய்’ தொகுதி வெளியிட்டது.

1907இல் போல்ஷிவிக் கட்சியில் ஐந்தாவது காங்கிரஸில் பங்கு பெற்றார். “தாய்” முழுதும் வெளிவந்தது. 1908 முதல் கார்க்கி லெனின் தொடர்பு வலுவடைகிறது. “ஒப்புதல்” “கழிக்கத் தகுந்தவன்” என்னும் புதினங்கள் வெளிவந்தன. 1909இல் கார்க்கியின் படைப்புகள் ரஷ்யமக்கள் - உழைக்கும் வர்க்கங்கள் எழுச்சிக்குப் பெரும் துணை செய்து வருகின்றன என்று லெனின் கார்க்கியை மனமாரப் பாராட்டிக் கடிதம் வரைந்தார்.

1909ஆம் ஆண்டு ரஷ்யா உழைப்பாளிகளுக்குக் கேப்ரி (இத்தாலி) யில் பயிற்சிப்பள்ளி தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டார். “ஒகுராவ், சிறுபட்டணம்” என்னும் புதினமும் “கோடை” என்னும் சிறுகதையும் வெளியாயின.

1910 இல் போல்ஷிவிக் கட்சியின் மிக முக்கியமான தலைவரான ஷெர்சின்ஸ்கியைச் சந்தித்து உரையாற்றினார். ஷெர்சின்ஸ்கி தம் நண்பருக்கு வரைந்த கடிதத்தில் எடுத்த எடுப்பிலேயே-முதல் சந்திப்பிலேயே கார்க்கி தம்மைக் கவர்ந்துவிட்டதாயும், அவருடைய மனத்தூய்மையும் உறுதியும் வியப்பளித்ததாயும் எழுதினார், “மாட்வி கொழம்கின் வாழ்க்கை” என்ற புதினம் பெர்லினில் வெளிவந்தது. மகத்தான அக்டோபர் புரட்சிக்கு முன் பல இலக்கியங்கள் வெளிவந்தன. 1915இல் புரட்சிக் கவிஞர் மாயகோவ்ஸ்கி இவரைச் சந்தித்து நண்பரானார்.

1917, 1921ல் புரட்சி முடிந்து, சில ஆண்டுகளில் லெனின் - கார்க்கி உறவு வலுப்பட்டதோடு சில தகராறுகளும் ஏற்பட்டன. கார்க்கி அறிவாளிகளிடையே ஏற்பட்ட