பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

85


தோளிலிருந்து மறுதோளுக்கு மாற்றினாள்; அந்த நெட்டைக்காலனைப் புருவங்களுக்கு மேலாக லேசாகப் பார்த்தான். அவன் ஒரு வேவுகாரன் என்று சந்தேகம் அவளுக்குத் தட்டியது.

“ஏ பிசாசுகளா! நீங்கள் எங்கள் பைகளைச் சோதனை போட்டு என்ன பிரயோசனம்? எங்கள் தலையையல்லவா சோதனை போட வேண்டும்!” என்று நெட்டையான சுருண்ட மயிர்த் தலையனான ஒரு தொழிலாளி தன்னைச் சோதனையிட்ட காவலாளிகளைப் பார்த்துக் கத்தினான்.

“உன் தலையிலே உண்ணிப் புழுவைத் தவிர வேறு என்ன இருக்கும்?” என்று பதில் கொடுத்தான் காவலாளிகளில் ஒருவன்.

“பின்னே, உண்ணிப் புழுவைப் பிடித்து, பத்திரம் பண்ணு. எங்களை விடு” என்று எரிந்து விழுந்தான் தொழிலாளி.

அந்த வேவுகாரன் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கசப்போடு காறி உமிழ்ந்தான்.

“என்னை உள்ளே போகவிடு. இந்த மாதிரிச் சுமையைத் தாங்கிக்கொண்டு நின்றால் என் முதுகுதான் முறிந்துபோகும்” என்று சொன்னாள் தாய்.

“போ, போய்த்தொலை” என்று எரிச்சலோடு கத்தினான் காவலாளி “வருகிறபோதே திண்டு முண்டு பேசிக்கொண்டேதான் வருகிறது!” என்று முனகிக்கொண்டான்.

தாய் உள்ளே வந்து தனது வழக்கமான இடத்துக்குச் சென்று, கூடைகளைக் கீழே இறக்கினாள். முகத்தில் சுரந்திருந்த வியர்வையைத் துடைத்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டாள்.

கூஸெவ் சகோதரர்களில் இருவர், இருவரும் யந்திரத் தொழிலாளிகள்—அவளிடம் உடனே வந்து சேர்ந்தார்கள்.

“அப்பம் இருக்கிறதா?” என்று அவர்களில் மூத்தவனான வசீலி முகத்தைச் சுழித்துக்கொண்டே கேட்டான்.

“நாளைக்குத்தான் கிடைக்கும்” என்றாள் அவள்.

அதுதான் அவர்களது பரிபாஷை, அந்தச் சகோதரர்களின் முகங்கள் பிரகாசமடைந்தன.

“அட என் அம்மாக்கண்ணு!” என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் இவான்.

வசீலி கூடைக்குள் பார்க்கும் பாவனையில் குனிந்து உட்கார்ந்தான்; அதே கணத்தில் ஒரு கத்தைப் பிரசுரங்களும் அவனது