பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

137


கண்கள் மட்டும் அக்கம் பக்கம் பார்த்துத் திருகத்திருக விழிப்பதை அவளால் தடுக்க முடியவில்லை, புத்தகத்தைத் திறந்து எழுத்துக்களை முணுமுணுக்கத் தொடங்கினாள். தெருப்பக்கத்தில், ஏதாவது சிறு சத்தம் கேட்டாலும், அவள் உடனே திடுக்கிட்டாள். புத்தகத்தைப் பட்டென்று மூடினாள், காதுகளை தீட்டிவிட்டுக்கொண்டாள்;

பிறகு மீண்டும் அவள் புத்தகத்தைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தாள், கண்ணைத் திறந்தும் மூடியும் வாய்க்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டாள்.

“நாம் வாழும் இந்த நிலத்தில்....”

கதவு தட்டும் சத்தம் கேட்டது விறுட்டென்று எழுந்து புத்தகத்தை அலமாரியில் செருகிவிட்டுக் கலக்கத்துடன் கேட்டாள்;

“யார் அங்கே”

“நான்தான்”

ரீபின் தன் தாடியைத் தட்டி கொண்டு வந்து சேர்ந்தான்.

“நீ யாரங்கே?” என்று முன்பெல்லாம் கேட்க மாட்டாயே. தனியாயிருக்கிறாயா? ஹஹோலும் இருப்பான் என்று நினைத்தேன். அவனை நான் இன்று பார்த்தேன்; சிறைவாசம் இவனைக் கெடுக்கவில்லை” என்றான் ரீபின்.

அவன் கீழே உட்கார்ந்து தாயின் பக்கமாகத் திரும்பினான்.

“சரி. நான் வந்த விஷயத்தைப் பேசலாம்’

அவனது கவனமிக்க புதிரான பார்வை அவள் உள்ளத்திலே புரியாத பயத்தை எழுப்பியது.

“பணம் இல்லாமல் எதுவும் நடக்காது” என்று ஆழ்ந்து கரகரக்கும் குரலில் சொன்னான் அவன். “பிறப்பதற்கும் பணம் வேண்டும்: சாவதற்கும் பணம் வேண்டும். புத்தகம் போடவும், பிரசுரம் வெளியிடவும் பணம் வேண்டும். இந்தப் புத்தகங்களுக்கு எல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது என்பது உனக்குத் தெரியுமா?

‘இல்லை. எனக்குத் தெரியாது” என்று அமைதியுடன், எனினும் ஏதோ சந்தேக உணர்ச்சியுடன் சொன்னாள் தாய்.

“எனக்கும் தெரியாது. சரி, இன்னொரு விஷயம். இதையெல்லாம் யார் எழுதுகிறார்கள்?”

“படித்தவர்கள்.....”

“ஓஹோ, படித்த சீமான்கள்தானா? என்றான் ரீபின், அவனது தாடி வளர்ந்த முகம் திடீரெனச் சிவந்தது. “சொல்லப்போனால், இந்தச்