பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

175


தோன்றியது. பகல் நேரங்களில் கூரைச் சரிவுகளிலிருந்து தண்ணீர் சொட்டும்; பாசி படிந்து அழுக்கேறிப்போன சுவர்களில் வேர்வை பூத்து வடிவதைப்போல், நீர் ஆவியாக மாறிப்பரவும். இரவு நேரங்களில் துளித்துளிப் பனித்துண்டுகள் வெள்ளை வெளேரென்று மின்னிக்கொண்டிருக்கும். சூரியனை அடிக்கடி பார்க்க முடிந்தது. வழக்கம்போல் சாக்கடைச் சிற்றோடைகள் குட்டைகளைநோக்கி முணுமுணுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தன.

மே தினக் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி விட்டன.

அந்தப் புதிய தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் குடியிருப்பிலும் தொழிற்சாலையிலும் சிதறிப் பரவின. அந்தப் பிரச்சாரத்தால் பாதிக்கப்படாமலிருந்த இளைஞர்கள் கூட, அந்தப் பிரசுரங்களைப் படித்துவிட்டுத் தமக்குள் பேசிக்கொண்டார்கள்:

“ஆமாம். நாமும் ஏதாவது செய்யத்தான் வேண்டும்”

நாள் நெருங்கிவிட்டது!” என்று வறட்டுப் புன்னகையோடு சொன்னான் வெஸோவ்ஷிகோவ்; “நாம் ஒருவருக்கொருவர் கண்ணாமூச்சி விளையாடியது போதுமப்பா, போதும்.”

பியோதர் மாசின் ஒரே உத்வேக சித்தனாயிருந்தான். மிகவும் மெலிந்துபோயிருந்த அவனது நடுக்கம் நிறைந்த அசைவுகளும் பேச்சுக்களும் கூண்டிலே அடைபட்டுள்ள வானம்பாடியை நினைவூட்டின. மௌனமே உருவான யாகவ் சோமவும் அவனோடு எப்போதும் சுற்றித் திரிந்தான்; அவனிடம் காணும் அழுத்தம் வயதுக்கு மீறியதாய்த் தோன்றியது. சிறை வாசத்தால் தலைமயிரில் பழுப்புக்கண்ட சமோய்லவ், வலீலி கூஸெவ், புகின், திராகுனவ் முதலியவர்களும் வேறு சிலரும் ஆயுதம் தாங்கிய ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என வற்புறுத்தினார்கள், ஆனால் பாவெல், ஹஹோல், சோமவ் முதலியவர்கள் அந்த யோசனையை நிராகரித்தார்கள்.

களைத்துச் சோர்ந்து விதிர் விதிர்த்துக்கொண்டிருந்த இகோர் வேடிக்கைப் பேச்சை ஆரம்பித்துவிட்டான்.

“தோழர்களே! இன்று அமுலிலிருக்கும் சமுதாய அமைப்பை மாற்றியமைப்பது ஒரு மகத்தான சாதனைதான். ஆனால், அந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு அறிகுறியாக. நான் ஒரு ஜோடி புது பூட்சுகள் வாங்கப்போகிறேன்” என்று நனைந்து கிழிந்து பழசாய்ப் போன தனது செருப்புக்களைக் காட்டிக்கொண்டே பேசினான் அவன். “என்னுடைய ரப்பர் செருப்புகளும் செப்பனிட்டுச் சீர்படுத்த முடியாத