பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

மக்சீம் கார்க்கி


செய்துதான் ஆக வேண்டுமென்றிருந்தால், நான் கொல்லத்தான் செய்வேன். ஞாபகம் இருக்கட்டும்! நான் எனக்காகத்தான் பேசிக்கொள்கிறேன். எனது பாபம் என்னுடனேயே சாகும். அந்தப் பாபம் எதிர்காலத்தில் கறை படியச் செய்யாமல் தொலையும்! அந்தப் பாபம் என்னைத் தவிர, வேறு எவரையும், வேறு எந்த ஆத்மாவையும் கறைப்படுத்தாது மறைந்து மாயும்!”

அவன் அறைக்குள்ளே கீழும் மேலும் உலவினான்; எதையோ வெட்டித் தள்ளுவது மாதிரி - தன் இதயத்திலிருந்து எதையோ வெட்டித் தள்ளுவது மாதிரி - கைகளை வீசிக்கொண்டான். தாய் அவனைப் பீதியும் துக்கமும் கலந்த மனத்தோடு பார்த்தாள். அவனது இதயத்துக்குள்ளே ஏதோ ஒரு பலத்த காயம் ஏற்பட்டு, அவனை வேதனைப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவள் உணர்ந்தாள். அந்தக் கொலையைப்பற்றிய இருண்ட பயங்கர ஆபத்தான எண்ணங்கள் அவளைவிட்டுப் பிரிந்தன். நிகலாய் வெஸோவ் ஷிகோவ் அந்தக் குற்றத்தைச் செய்திராவிட்டால், பாவெலின் நண்பர்களில் மற்றவர் எவருமே அதைச் செய்யக்கூடியவர்கள் அல்ல. பாவெல் தன் தலையைத் தொங்கப் போட்டவாறு ஹஹோலின் பலம் பொருந்திய அழுத்தம் வாய்ந்த பேச்சைக் கேட்டவாறு இருந்தான்.

“தங்கு தடையற்று நீ முன்னேறிச் செல்லவேண்டுமானால், சமயங்களில் நீ உன் விருப்பத்துக்கு மாறான காரியங்களைக்கூடச் செய்யவேண்டும்; அதற்காக நீ சகலத்தையும், உன் பரிபூரண இதயத்தையும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும். கொள்கைக்காக நீ உன் உயிரை இழப்பது மிகவும் லேசான காரியம். அதைவிட மகத்தானவற்றை, உன்னுடைய சொந்த வாழ்வில் உனக்கு மிகவும் அருமையும் விருப்பமும் நிறைந்தவற்றைக்கூட நீ தியாகம் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட மகத்தான தியாகத்தினால்தான், நீ எந்த ஒரு சத்தியத்துக்காகப் போராடுகிறாயோ அந்தச் சத்தியம் எப்படி ஒரு மகா சக்தியாக வளர்ந்தோங்கிப் பெருகுகிறது என்பதை உன்னால் பார்க்கமுடியும். அந்தச் சத்தியம்தான் இந்த உலகத்தில் உனக்கு மிகவும் அருமை வாய்ந்த, அரிய பொருளாக இருக்கும்!”

அவன் அறையின் மத்தியில் சட்டென நின்றான். முகமெல்லாம் வெளுத்துப்போய், கண்களைப் பாதி மூடியவாறு கையை உயர்த்தி அமைதி நிறைந்த உறுதியோடு மேலும் பேசத் தொடங்கினான்:

“மக்கள் தங்கள் அழகைத் தாமே பார்த்து வியக்கின்ற காலம். மற்றவர்களுக்கெல்லாம் தாம் தனித்தனித் தாரகைகளைப் போல் ஒளி