பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

மக்சீம் கார்க்கி


“நாங்கள் அதைக் கற்றுக் கொள்வோம்” என்றான் எபீம்.

“ஆனால், ராணுவ அதிகாரிகள் அதைக் கண்டுபிடித்துவிட்டார்களோ, அப்புறம் உங்களைச் சுட்டுக் கொன்று விடுவார்கள்” என்று எபீமைக் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டே சொன்னான் பாவெல்.

“ஆமாம், அவர்களிடம் இரக்கச் சித்தத்தை எதிர்பார்க்கமுடியாது” என்று அந்தப் பையன் அமைதியுடன் ஆமோதித்துக்கொண்டே மீண்டும் புத்தகங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.

“தேநீர் அருந்து, எபீம்” என்றான் ரீபின். “நாம் சீக்கிரம் புறப்படவேண்டும்.”

“அதற்கென்ன? போவோம். அது சரி, புரட்சி என்பது என்ன? பெருங்கலகமா?” என்றான் எபீம்.

அதற்குள் அந்திரேய் அங்கு வந்து சேர்ந்தான். குளித்துவிட்டு வந்ததால் அவனது உடம்பெல்லாம் சிவந்துபோய் ஆவியெழும்பிக் கொண்டிருந்தது. முகத்தில் சோர்ந்த பாவம் காணப்பட்டது. அவன் ஒன்றுமே பேசாமல் எபீமோடு கைகுலுக்கிவிட்டு ரீபினுக்கு அடுத்தாற்போல் உட்கார்ந்தான், ரீபினைப் பார்த்ததும் லேசாகச் சிரித்துக்கொண்டான்.

“நீ ஏன் உற்சாகமே அற்றுப் போயிருக்கிறாய்?” என்று அவனது முழங்காலில் தட்டிக்கொண்டே கேட்டான் ரீபின்.

“ஒன்றுமில்லையே!” என்றான் ஹஹோல்.

“அவனும் ஒரு தொழிலாளிதானா?” என்று அந்திரேயைப் பார்த்துக் கேட்டான் பீம்.

‘ஆமாம். எதற்காகக் கேட்கிறாய்?’ என்றான் அந்திரேய்.

“இல்லை. அவன் இதற்கு முன் எந்த ஆலைத் தொழிலாளியையும் பார்த்ததே இல்லை. அவனுக்கு அவர்களைப் பற்றி ஒரு தனி அபிப்பிராயம்” என்றான் ரீபின்.

‘எப்படிப்பட்ட அபிப்பிராயம்?” என்றான் பாவெல்.

“உங்கள் எலும்புகள் கூர்மையானவை. ஆனால் விவசாயியின் எலும்புகள் மொட்டையானவை” என்று. அந்திரேயைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னான் பீம்.

“முஜீக் தன் கால்களை நிலத்தில் நன்றாகப் பதிய ஊன்றி நிற்கிறான்—நிலம் அவனுக்குச் சொந்தமில்லாவிட்டாலும், நிலத்தில் நிற்கும் உணர்ச்சி மட்டும் அவனை விட்டு நீங்குவதில்லை, அவன்