பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

221


போலீஸ்காரர்களிடமும் பழகி வந்ததால் அவர்களது அபிப்பிராயம் அவளுக்கும் தெரிய நேர்ந்தது.

‘கொலைகாரனை எப்படித்தான் கண்டுபிடிப்பது? என்று காலையில் சுமார் நூறு பேர் இஸாயைப் பார்த்திருக்கிறார்கள். அவர்களின் தொண்ணூறு பேர் அவனைத் தாங்களே ஒழித்துக்கட்ட நேர்ந்திருந்தால், அது குறித்துச் சந்தோஷப்பட்டிருப்பார்கள். அவனும்தான் என்ன? ஏழு வருஷ காலமாய் ஒவ்வொருத்தரையும் என்ன பாடுபடுத்தி வைத்தான்!”

ஹஹோல் இப்போது எவ்வளவோ மாறிப் போய்விட்டான். அவனது முகம் மெலிந்து ஒட்டிப் போயிற்று. கண்ணிமைகள் கனத்துத் தடித்துப்போய்விட்டன. எனவே, அவன் அவனது பெரிய கண்களில் பாதியை மூடிக் கவிந்துவிட்டன. அவனது நாசியோரங்களிலிருந்து வாயை நோக்கி மெல்லிய வரிக்கோடுகள் விழுந்திருந்தன. அவன் வழக்கமான விஷயங்களைப் பற்றி மிகவும் குறைவாகப் பேசினான். அறிவும் சுதந்திரமும் ஆட்சி செலுத்தும் வெற்றி மகோன்னதமான எதிர்காலத்தைப் பற்றி தனது ஆசைக் கனவை அவன் மற்றவர்களிடம் எடுத்துக் சொல்லி அவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும்போதும், அவன் அதிகமான ஆர்வத்தோடு பேசினான்.

இஸாயின் மரணத்தைப் பற்றிய பேச்சு தேய்ந்து இற்றுச் செத்துப்போனவுடன், அவன் ஒரு கசந்த புன்னகையுடன் சொன்னான்,

“அவர்கள் மக்களை மட்டும்தான் மதிக்கவில்லை என்பது அல்ல. மக்களின் மீது ஏவிவிடும் வேட்டை நாய்களாக உபயோகிக்கும் தங்களது கைக்கூலிகளைக்கூட அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். அக்கைக்கூலிகள் தொலைந்து போனதற்காக அவர்கள் வருந்தமாட்டார்கள்; தங்கள் காசு தொலைந்து போனால் தான். வருத்தப்படுவார்கள்!”

“இந்தப் பேச்சு போதும், அந்திரேய்!” என்று உறுதியுடன் கூறினான் பாவெல்.

‘உளுத்து அழுகி ஓடாகிப் போனதைத் தொட்டாலே உதிர்ந்து பொடியாய்ப் போய்விடும். அவ்வளவுதான்’ என்றாள் தாய்.

“இதெல்லாம் உண்மைதான். ஆனால் இது மட்டும் ஆறுதல் தராது என்று சோர்வோடு பதில் சொன்னான் ஹஹோல்

அவன் இதையே பல் தடவை சொல்லி வந்தான். எனினும் அதைச் சொல்லும்போது, முன்னிருந்ததைவிட வார்த்தைகள், அனைத்தையும் அடக்கிய விசேஷமான அர்த்தத்துடன் கடுப்புக் காரவேகமும் பெற்று ஒலித்தன.