பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

மக்சீம் கார்க்கி


கூறிக்கொண்டே ஹஹோல் முகம் கை கழுவுவதற்காக வாசற்பக்கத்துக்குச் சென்றான்.

“துயில் கலைந்து அணியில் சேர விரைந்து வாரும் தோழர்காள்!” என்று லேசாகப் பாடினாள் பாவெல்.

நேரம் ஆக ஆகப் பொழுதும் நன்கு புலர்ந்து வானம் நிர்மலமாயிற்று: மேகத் திரள்கள் காற்றால் தள்ளப்பட்டு ஒதுங்கி ஓடிவிட்டன. சாப்பாட்டு மேஜையைத் தயார் செய்யும் போது தாய் எதையெதையோ எண்ணித் தலையை அசைத்துக் கொண்டாள். அவளுக்கு எல்லாம் ஒரே அதிசயமாயிருந்தது. அவர்கள் இருவரும் அன்று காலையில் கேலியும் கிண்டலுமாய்ச் சிரித்துப் பேசிப் பொழுதைப் போக்கினார்கள்; ஆனால் நண்பகலில் அவர்களுக்கு என்ன ஆபத்து காத்திருக்கிறது என்பதோ அவருக்கும் தெரியாது. இருந்தாலும் அவள் அதனால், கலவரமடையவில்லை அமைதியாகவும் குஷியாகவும் இருந்தாள்.

காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்கென்று நெடுநேரம். தேநீர் அருந்தினார்கள். பாவெல் தனது கோப்பையிலிருந்து சர்க்கரையை வழக்கம் போலவே மிகவும் மெதுவாகக் கலக்கிக் கரைத்தான். ரொட்டியின்மீது உப்பைச் சரிசமமாகத் தூவிக்கொண்டான். அதுதான் அவனுக்கு எப்போதும் பிடித்த பொருள். ஹஹோல் மேஜைக்கடியில் கால்களை அப்படியும் இப்படியும் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தான்; அவனுக்குத் தன் கால்களை எப்படி வைத்தாலும் செளகரியமாயிருப்பதாகத் தோன்றவில்லை. தேநீரில் பட்டுப் பிரதிபலிக்கும் சூரிய ஒளி சுவரிலும் முகட்டிலும் ஆடியசைந்து நர்த்தனம் புரிவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

‘நான் பத்து வயதுப் பையனாக இருக்கும்போது, எனக்குச் சூரியனை ஓர் கண்ணாடிக் கிளாசுக்கள் பிடித்து வைத்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்ததுண்டு’ என்றான் அவன். “எனவே நான் ஒரு கிளாஸை எடுத்துக்கொண்டு சூரியன் விழும் இடத்துக்குச் சென்று கண்ணாடிக் கிளாஸால் டபக்கென்று அமுக்கிப் பிடித்தேன். கண்ணாடி உடைந்து என் கையில்தான் காயம் பட்டது. அத்துடன் வீட்டிலும் அடி வேறு விழுந்தது. அடிபட்ட பிறகு நான் வீட்டு முற்றத்துக்கு வந்தேன். அப்போது சூரியன் ஒரு சேற்றுக் குட்டையில் தெரிந்தது.

உடனே என் ஆத்திரத்தையெல்லாம் வைத்துக் கொண்டு அந்தச் சூரியனை மிதிமித யென்று மிதித்துத் தள்ளிவிட்டேன். என் மேல் காலெல்லாம்சேறு தெறித்துப் பாழாயிற்று. இதற்காக நான் மீண்டும் ஒருமுறை அடி வாங்கினேன். அந்தச் சூரியனைப் பழிவாங்க எனக்கு