பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

239


ஆனால் அவள் கேட்ட வார்த்தைகள் உயிரற்று உணர்வற்று ஒலிப்ட3வைபோல் இருந்தன. எனவே அந்தக் கூட்டத்தினரிடமிருந்து விலகிப்போவதற்காக நடையை எட்டிப்போட்டாள். அவர்கள் மிகவும் மெதுவாக ஆடியசைந்து நடந்து வந்ததால், அவள் அவர்களை முந்தி முன்னேறிச் செல்வதில் சிரமம் எதுவும் ஏற்படவில்லை.

திடீரென்று அந்த ஊர்வலம் எதனோடோ அதிகேவமாக மோதிக்கொண்டது போலத் தோன்றியது. அந்த அணிவகுப்பு முழுவதுமே திடுக்கிட்டுப் பின்னடித்தது: பய பீதி நிறைந்த கசமுசப்புக் குரல் லேசாக எழுந்து பார்த்தது. அந்தப் பாட்டும் கூட நடுநடுங்கி ஒலித்தது. இருந்தாலும் அந்த நடுக்கத்தைப் போக்குவதற்காக, சிலர் மிகவும் உரத்த குரலிலும், துரித கதியான சப்தத்திலும் அதைப் பாடத் தொடங்கினார்கள். ஆனால், மீண்டும் அந்தப் பாட்டு உள்வாங்கி மங்கியது. ஒருவர் பின் ஒருவராக அந்த மக்கள் பாடுவதை நிறுத்தத் தொடங்கினார்கள், அந்தப் பாட்டைப் பழைய உச்ச நிலைக்கு கொண்டு வருவதற்காக, சிலர் மட்டும் உத்வேகம் நிறைந்தவாறு பாடும் குரல் மட்டும் கேட்டது;

பட்டினியும் பசியுமாகப்
பாடுபடும் தோழர்காள்...
துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

ஆனால் இந்தப் பொது முழக்கத்தில் ஒத்துழைப்பும் இல்லை உறுதி பெற்று நம்பிக்கையும் இல்லை. ஏற்கெனவே அவர்களது குரல்களில் பயபீதி புரையோடிவிட்டது.

முன்புறத்தை தாயினால் பார்க்க முடியாததாலும் என்ன நேர்ந்துவிட்டது என்பதை அறிய முடியாததாலும் அவள் அந்தக் கூட்டத்தினரை முட்டித் தள்ளிக்கொண்டு, கூட்டத்தினூடே, புகுந்து முன்னே செல்ல முனைந்தாள். அவள் முன்னேற முன்னேற ஜனக்கூட்டம் அவளைப் பின்னடித்துத் தள்ளியது. அவர்களில் சிலர் முகத்தைச் சுழித்தார்கள், சிலர் தங்கள் தலைகளைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். சிலர் அசட்டுத்தனமாய்ப் புன்னகை செய்தார்கள்: இன்னும் சிலர் கேலியாகச் சீட்டியடித்துக்கொண்டிருந்தார்கள். அவள் அவர்களது முகங்களைப் பார்த்தாள். அவளது கண்கள், வினாத் தொடுத்தன, வேண்டுதல் செய்தன. அழைப்பு விடுத்தன.

“தோழர்களே!” பாலெலின் குரல் கேட்டது. “ராணுவ வீரர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தான்! அவர்கள் தம்மைத் தொடமாட்டார்கள்!