பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

241


அவள் அந்தக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு. கொடியின் பக்கமாக, அதன் அருகே நிற்கும் தனக்குத் தெரிந்த ஆட்களின் பக்கமாகச் சேர்ந்து நிற்பதற்காக, விறுவிறுவென்று முன்னேறினாள். அங்கு நிற்கும் தனக்கு தெரிந்த நபர்கள். தமக்குத் தெரியாத பிற நபர்களோடு கலந்து அவர்களிடம் ஏதோ உதவியை நாடித் தவிப்பது போல நின்றார்கள். திடீரென்று அவள் ஒரு நெட்டையான மழுங்கச் சவரம் செய்த ஒற்றைக் கண் மனிதன் மீது பலமாக மோதிக் கொண்டாள். அவளைப் பார்ப்பதற்காக விருட்டென்று தலையைத் திருப்பி அவளைக் கேட்டாள்.

“யார் நீ?”

“நான் பாவெல் விலாசவின் தாய்” என்று சொன்னாள், இப்படிச் சொல்கையில் தனது கால்கள் குழவாடி நடுநடுங்குவதையும் வாயின் கீழுதடு நடுங்குவதையும் அவள் உணர்ந்தாள்.

“ஆஹா!” என்றான். அந்த ஒற்றைக் கண்ணன்.

“தோழர்களே! நமது வாழ்க்கை முழுவதிலுமே நாம் முன்னேறிக் கொண்டேதான் இருக்க வேண்டும்! முன்னேறிச் செல்வதைத் தவிர நமக்கு வேறு வழியே கிடையாது!” என்றான் பாவெல்.

அங்கு நிலவிய சூழ்நிலை அமைதியும் ஆர்வமும் நிறைந்ததாக இருந்தது. கொடி மேலே உயர்ந்து ஒரு கணம் அசைந்தது. பிறகு மக்கள் கூட்டத்தின் தலைகளுக்கு மேலாக, எதிராகத் தோன்றிய மனிதச் சுவரை நோக்கி நிதானமாக முன்னேறிச் செல்லச் செல்ல, காற்றில் மிதந்து வீசிப் பறந்தது. தாய் நடுநடுங்கிப் போய் மூச்சு முட்டித் திணறிக் கண்களை மூடிக்கொண்டாள்.-நாலு பேர்கள், கூட்டத்தை விட்டுப் பிரிந்து தனியே முன்னே சென்றார்கள். அவர்கள் பாவெல்.. அந்திரேய், சமோய்லல் மாசின்-ஆகியோரும் முன்னே சென்றார்கள்.

பியோதர் மாசினின் கணீரென்ற குரல் காற்றில் ஒலித்தது:

இணையும் ஈடும் இல்லாத
இந்தப் போரில் நீங்களெல்லாம்...

ஆழ்ந்த பெரு மூச்சைப்போல் தணிந்த குரல்களில் அடுத்த அடி ஒலித்தது:

பணயம் வைத்தே உம்முயிரைப்
புலியாய்க் கொடுத்தீர் தியாகிகளே!

அவர்கள் நால்வரும் பாட்டுக்குத் தகுந்தவாறு நடைபோட்டு முன்னேறினர்.