பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

மக்சீம் கார்க்கி


புருவங்கள் உயர்ந்து நிற்க, அவனது கண்கள் பாவெலின் மீது பதிந்து நிலைகுத்தி நின்றன.

தாயால் தான் பார்த்தவற்றை உணர்ந்தறிய முடியவில்லை. அவளது இதயத்துக்குள் ஒரு பயங்கர ஓலம் நிறைந்து விம்மி எந்த நிமிஷத்திலும் வெடித்து வெளிப் பாய்வது போல் முட்டி மோதும் அந்த ஒல் உணர்ச்சியால் அவள் திக்கு முக்காடினாள். தன் மார்பை அழுத்திப் பிடித்து அதை உள்ளடக்கினாள், ஜனங்கள் அவளைத் தள்ளினார்கள். எனவே அவள் தள்ளாடியபடி முன்னே நடந்தாள், ஞாபகமின்றி, அநேகமாக நினைவிழந்து நடந்தாள் அவள். தனக்குப் பின்னால் நின்ற கூட்டம் தம்மை எதிர்நோக்கி வரும் பேரலையால் கொஞ்சம் கொஞ்சமாக அடித்துச் செல்வது போல் அவள் உணர்ந்தாள்.

கொடியைத் தாங்கி நின்றவர்களும் இன்னும் நெருங்கிப் போனார்கள். அந்தச் சாம்பல் நிறச் சிப்பாய்கள் இறுக்கமான சங்கிலிக் கோர்வையாய் இன்னும் நெருங்கி வந்தனர், பற்பலவித வண்ணங்கள் பெற்ற கண்களோடு ஒழுங்கற்றுத் தெரியும் மஞ்சள் நிற வரிக்கோடுகளோடு, விகாரமாக குலைந்துபோன அந்தச் சிப்பாய் முகம் தெரு முழுதும் அடைத்தவாறு முன்னேறி வருவதைப் பார்த்தாள். அதற்கு முன்னால், ஊர்வலம் வருபவர்களின் மார்புகளுக்கு நேராக ஏந்திப்பிடித்த துப்பாக்கிச் சனியன்களின் கொடிய முனைகள் பளபளத்தன. அந்தக் கூட்டத்தினரின் மார்பகங்களைத் தொடாமலேயே அந்தக் கூட்டத்தை ஒவ்வொருவராகப் பிரித்துக் கலைத்துவிட்டன.

தனக்குப் பின்னால் ஜனங்கள் ஓடுவதையும், கூக்குரலிடுவதையும் அவள் கேட்டாள்:

“கலையுங்களடா!”

“விலாசவ், ஓடிப்போ!”

“பின்னாலே வா, பாவெல்”

“கொடியை இறக்கு. பாவெல்!” என்று நிகலாய் வெஸோவ்ஷிகோவ் மெதுவாகச் சொன்னான். “என்னிடம் கொடு. நான் அதை மறைத்து வைக்கிறேன்.”

அவன் கொடியின் கம்பைப் பற்றிப் பிடித்து இழுத்தான், கொடி பின்புறமாகச் சாய்ந்து ஆடியது.

“விடு. அதை!” என்று கத்தினான் பாவெல்,

நிகலாய் சூடுபட்டதுபோலத் தன் கையை வெடுக்கென்று பிடுங்கினான். அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்றுவிட்டார்கள். பாவெலைச் சுற்றி ஒரு மதில்போல நின்றார்கள். ஆனால்