பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

மக்சீம் கார்க்கி


அப்புறப்படுத்தத் தவறிவிட்டால் அவன் அந்தப் பாத்திரங்களை எடுத்துத் தரையில் வீசியெறிவான். பிறகு தன் முன்னால் ஒரு பாட்டில் ஒட்கா மதுவை எடுத்து வைத்துக் கொள்வான்; தன்முதுசைச் சுவரோடு சாய்த்து, கண்களை மூடி, வாயைப் பிளந்து. கேட்பவர்களுக்கு ஏக்கம் கொடுக்கும் தாழ்ந்த குரலில் ஒரு பாட்டை அழுதாற்போல் பாட ஆரம்பிப்பான். சோகமயமான அந்த ஆபாக ஒலி ரொட்டித் துண்டுகளை உதவி வெளித்தள்ளி, மீசை மயிரில் சிக்கித் திணரும். அவன் தன் தாடி மீசையைத் தன் தடித்த விரல்களால் கோதித் தடவி விட்டுக்கொண்டே பாட ஆரம்பிப்பான். அவனது பாட்டின் வாசகங்கள் தெளிவற்று நீட்டி இழுக்கும். ஆனால் அவனது சாரீரமோ குளிர் காலத்தில் ஊளையிடும் ஓநாய்க்கூட்டத்தின் ஒப்பாரியை நினைப்பூட்டும். ஓட்கா மது தீரும் வரையிலும் அவன் பாடுவான்: அதன் பின்னர் அவன் பெஞ்சின்மீது சாய்ந்துவிடுவான்; அல்லது அப்படியே மேஜைமீது குனிந்து படுத்து ஆலைச்சங்கு அலறுகின்ற காலை நேரம் வரையிலும் தூங்குவான், அவனது நாயும் அவன் பக்கத்திலேயே விழுந்து கிடக்கும்.

அவன் குடல் புண்ணால் மாண்டுபோனான். சாவதற்கு முன்னால் ஐந்து நாட்களாக, அவன் படுக்கையிலே துடித்துப் புரண்டான். உடலெல்லாம் கறுத்துப் போன அவன், கண்களை மூடி, பற்களை நறநறவென்று கடித்தான். இடையிடையே தன் மனைவியைப் பார்த்துச் சொல்லுவான்.

“எனக்குப் பாஷாணம் கொடு, என்னை விஷங்கொடுத்துக் கொன்றுவிடு”

டாக்டர் ஏதோ ஒரு ஒத்தடம் போடச் சொன்னார். ஆனால், மிகயீல் விலாசவுக்கு ஆபரேஷன் பண்ணித்தானாக வேண்டும் என்றும், அன்றைய தினமே ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்றும் சொன்னார்.

“நீ நாசமாய்ப் போக, கழிசடையே! உன் உதவியில்லாமலே நான் செத்துப் போகிறேன்” என்று முனகினான் மிகயீல்.

டாக்டர் சென்ற பிறகு, அவனது மனைவி கண்ணீர் பொழிந்தவாறே ஆபரேஷன் பண்ணிக்கொள்ளும்படி புருஷனிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டாள், அவனோ தன் முஷ்டியை ஆட்டியவாறே அவளைப் பார்த்துச் சொன்னான்.

“நான் பிழைத்து எழுந்திருந்தால், உனக்குத்தான் சங்கடம்!”

ஆவைச்சங்கு அலறிய அந்த அதிகாலையில் அவன் இறந்து போனான். சவப்பெட்டியில் திறந்த வாயோடும், வெறுப்பு நிறைந்து