பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

267


கரி படர்ந்த பூமியின்மேல் ஆகாயத்தை நோக்கி புகை போக்கிகளை உயர நீட்டிக்கொண்டு கருஞ்சிவப்புச் சிலந்தியைப் போல நின்றது தொழிற்சாலை. அதைச் சுற்றிலும் தொழிலாளர்களின் மாடியற்ற ஒற்றைத்தள வீடுகள் மொய்த்துச் சூழ்ந்திருந்தன. அவை சிறிதும் பெரிதுமாக நிறம் வெளிறிக் குழம்பிப் போய், சேற்றுப் பிரதேசத்தை அடுத்து நின்றன; அந்த வீடுகள் தமது ஒளியற்ற சிறுசிறு ஜன்னல்கள் மூலம் அடுத்தடுத்த வீடுகளைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அந்த வீடுகளுக்கு மேலாக, தொழிற்சாலையைப் போலவே கருஞ்சிவப்பாகத் தோன்றும். தேவாலயம் உயர்ந்து நின்றது. அதனுடைய ஊசிக் கோபுரம் புகை போக்கிகளின் உயரத்தை விட குட்டையாயிருந்தது.

பெருமூச்செறிந்துகொண்டே, தனது கழுத்தை இறுக்கி திணறச் செய்வதுபோலத் தோன்றி தனது ரவிக்கையின் காலரைத் தளர்த்திவிட்டுக் கொண்டாள் தாய்.

“போ இப்படி!” என்று முனகிக்கொண்டே வண்டிக்காரன் குதிரையின் கடிவாளத்தைப் பற்றி இழுத்தான். அவன் ஒரு கோணக்கால் மனிதன். குட்டையானவன், வயதை நிதானிக்க முடியாத தோற்றமுடையவன். அவனது தலையிலும் முகத்திலும் வெளிறிய மயிர்கள் சில காணப்பட்டன, கண்களில் வர்ண ஜாலம் எதுவுமே இல்லை. அவன் வண்டிக்குப் பக்கமாக நடந்து வரும்போது அசைந்து அசைந்து நடந்தான். வலப்புறம் போவதோ. இடப்புறம் போவதோ. அவனுக்கு எல்லாம் ஒன்றுதான் என்று தெளிவாகத் தெரிந்தது.

“சீக்கிரம் போ” என்று உணர்ச்சியற்ற குரலில் குதிரையை விரட்டிக்கொண்டே, தனது கோணல் கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்தான்; அவனது பூட்சுகளில் சேறு ஒட்டி அப்பிக் காய்ந்து போயிருந்தது. தாய் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளது இதயத்தைப் போலவே வயல்வெளிகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன.

கொதிக்கும் மணல் வெளியில், குதிரை தலையை ஆட்டிக்கொண்டு கால்களை கனமாக ஊன்றி நடந்தது. மணல் சரசரத்தது; அந்த லொடக்கு வண்டி கிரீச்சிட்டது. வண்டிச் சக்கரத்தால் ஏற்படும் ஒலி புழுதியுடன் பின்தங்கிவிட்டது...

நிகலாய் இவானவிச் நகரின் ஒரு கோடியில் ஒரு அமைதி நிறைந்த தெருவில் குடியிருந்தான். பழங்காலக் கட்டிடமான ஒரு இரண்ட்டுக்கு மாடி அருகில், பச்சை வர்ணம் அடிக்கப் பெற்ற சிறு பகுதியில் அவனது வாசஸ்தலம் இருந்தது. அந்தப் பகுதிக்கு முன்னால் ஒரு சிறு தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்திலுள்ள பன்னீர்பூ