பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

மக்சீம் கார்க்கி


தோன்றுகிறது. மறுகணம் ஒரே மங்கல்: கண் முன் இருள் மண்டிக் கவிகிறது. உதாரணமாக உங்களைப் பார்க்கிறேன். நீங்கள் ஒரு பெரிய இடத்துப் பெண், இந்த வேலைக்கு வருகிறீர்கள்.... பாவெலை தெரிந்திருக்கிறீர்கள், அவனைப்பற்றி நல்லபடியாய்ப் பேசுகிறீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும்.

“நன்றி பெறத் தகுதியுடையவர் நீங்கள்தான்” என்று கூறிச் சிரித்தாள் சோபியா.

“நான் என்ன செய்துவிட்டேன்? அவனுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்தது நானில்லையே” என்று பெருமூச்செறிந்தாள் தாய்.

சோபியா சிகரெட்டை கோப்பைத் தட்டில் நசுக்கி அணைத்தாள். அவள் தலையை அசைத்த அசைப்பில் அவளது பொன்நிற முடி, உலைந்து நழுவி. அவளது இடை வரையிலும் வந்து விழுந்து கற்றை கற்றையாய் புரண்டது.

“சரி, இந்த அலங்காரத்தையெல்லாம் களைவதற்கு நேரமாகிவிட்டது’ என்று கூறிக்கொண்டே அவள் எழுந்தாள், எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.

3

நிகலாய் மாலையில் திரும்பி வந்தான், அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சோபியா சிரித்துக்கொண்டே அவள் எப்படி தேசாந்திர சிட்சையிலிருந்து தப்பியோடி வந்த மனிதனைச் சந்தித்தாள், அவனை எப்படி மறைத்து வைத்தாள். அவள் எப்படி ஒற்றர்களுக்காக பயந்து நடுங்கினாள், வழியில் பார்க்கின்ற ஒவ்வொருவரையுமே ஒற்றர்கள் என்று அவள் எப்படிக் கருதினாள். ஓடி வந்த மனிதன் எப்படி நடந்துகொண்டான் என்பன போன்ற விவரங்களையெல்லாம் சுவாரசியத்தோடு விளக்கிச் சொன்னாள், அவளது குரலில் ஒரு பெருமைத்தொனி ஒலிப்பதாகத் தாய் கண்டறிந்தாள். ஒரு தொழிலாளி தான் ஒரு சிரம் சாத்தியமான காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்ததைப்பற்றி அடையும் பெருமித உணர்ச்சி போலிருந்தது அது.

இப்போது அவள் ஒருசாம்பல் நிற வேனிற்கால நீள் அங்கி அணிந்திருந்தாள். அந்தக் கவுன் அவளை மேலும் சிறிது நெடியவளாகக் காட்டியது. அவளது கண்கள் கருமை எய்தின போலவும் அவளது நடமாட்டங்கள் மிகுந்த அடக்கம் கொண்டன போலவும் தோன்றின.

“உனக்கு இன்னொரு வேலை காத்திருக்கிறது. சோபியா” என்று சாப்பிட்டு முடிந்தவுடன் கூறினான் நிகலாய். “விவசாயிகளுக்காக நாம்