பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

மக்சீம் கார்க்கி


இந்த மாதிரிக் காரியங்களை அவன் எதற்காகச் செய்ய வேண்டும்? இந்த மாதிரியான செய்கையிலே ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?”

அருணோதய வேளையைப் போலவே குதூகலம் தொனிக்கும் ஒரு பாட்டை மெதுவாகப் பாட ஆரம்பித்தாள் சோபியா,...

7

தாயின் வாழ்க்கை ஒரு விசித்திர அமைதியோடு நடந்துகொண்டிருந்தது. சமயங்களில் இந்த அமைதி அவளுக்கு வியப்பூட்டியது. அவளது மகனோ சிறையிலிருந்தான். அவனுக்கு ஒரு கொடிய தண்டனை கிடைக்கும் என்பது அவளுக்குத் தெரியும். என்றாலும் அதைப்பற்றி அவள் நினைக்கின்ற வேளையெல்லாம் அவளையும் அறியாது அந்திரேய், பியோதர், மற்றும் எத்தனைடோர்களுடைய முகங்களும் அவளது மனத்திரையில் நிரம்பித் தோன்றும். மகனின் உருவம் அவளது கண்முன்னால் பிரமாண்டமாகப் பெருகி வளர்ந்து, அவனது விதியில் பங்கெடுக்கும் மற்ற அனைவரையும் தழுவி அணைத்து மறைத்து நிற்பதாகத் தோன்றியது. சிந்தனையினூடே தோன்றும் மற்ற எண்ணங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மகனைப் பற்றிய நினைவை மட்டும் வளர்த்துப் பெருக்குவாள். தட்டுத் தடுமாறிச் செல்லும் அந்த மெல்லிய சிந்தனைக் கதிர்கள் எட்டெட்டுத் திசைகளிலும் சென்று, எல்லாவற்றையும் தொட்டு, சகல தத்துவங்களின் மீதும் ஒளிவீசி, சகல விஷயங்களையும் ஒரு தனி உருவமாக ஒன்றுதிரட்டி ஒருமையாக உருவாக்க முயன்று கொண்டிருந்தன. எனவே அவளது மனம் ஒரே விஷயத்தின் மீது மட்டும் நிலைக்கவில்லை; தன்னுடைய மகனைப்பற்றியே ஏக்கத்தையும் பயத்தையும் மட்டுமே அவள் நினைக்கவில்லை.

சோபியா வந்தவுடனேயே எங்கேயோ சென்று விட்டு ஐந்து நாட்கள் கழித்துத்தான் திரும்ப வந்தாள்; அவள் ஒரே உற்சாகமும் உவகையும் நிறைந்த குதூகலத்தோடு வந்தாள். ஆனால் வந்த சில மணிநேரத்துக்குள்ளாகலே அவள் மீண்டும் போய்விட்டாள்; இரண்டு வாரம் கழித்துத் திரும்பவும் வந்தாள். வாழ்க்கையின் விரிவான வட்டத்தில் அவள் சுழலுவதுபோலத் தோன்றியது. இடையிடையே மட்டும் தனது சகோதரனின் வீட்டை எட்டிப் பார்த்து, அவ்வீட்டை அவள் தனது இசையாலும், உற்சாகத்தாலும் நிறைவுபெறச் செய்வதுபோலத் தோன்றியது. தாய்க்கு வரவர சங்கீதத்தில் விருப்புண்டாயிற்று. அந்தச் சங்கீதத்தை அவள் கேட்கும்போது இத சுகம் தரும் இனிய அலைகள்