பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

மக்சீம் கார்க்கி


பிழைப்பை வாழ்வென்று சொல்லமுடியுமா? மற்றவர்கள் ஏதேர் நல்ல காலம் வரத்தான் போகிறது என்ற நம்பிக்கையிலாவது வாழ்கிறார்கள். ஆனால் என் தாயோ நாளுக்கு நாள் அதிகப்படியான வசவுகளைக் கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர, வேறு எதையுமே எதிர்பார்க்க முடியவில்லை. அந்த நம்பிக்கை அவளுக்கு இல்லை.”

“நீங்கள் சொல்வது உண்மை, நதாஷா!” என்று சிந்தித்தவாறே சொன்னாள் தாய். “நல்ல காலத்தை எதிர்பார்த்துத்தான் ஜனங்கள் வாழ்கிறார்கள். எந்தவித நம்பிக்கையுமே இல்லாவிட்டால், அது எந்த வாழ்வோடு சேர்த்தி?” அவள் அந்தப் பெண்ணின் கையைத் தட்டிக் கொடுத்தாள்: “அப்படியென்றால் நீங்கள் இப்போது தனியாகத்தான் இருக்கிறீர்கள். இல்லையா?”

“ஆமாம். தன்னந் தனியாகத்தான்” என்று லேசாகச் சொன்னாள் நதாஷா.

“அது சரி” என்று ஒரு கணம் கழித்துப் புன்னகை புரிந்தவாறே சொன்னாள் தாய். ‘நல்லவர்கள் என்றுமே அதிக நாட்கள் தனியாக வாழ்வதில்லை. நல்லவர்களோடு மற்றவர்கள் வந்து எப்போதுமே ஒட்டிக்கொள்வார்கள்.


8

ஒரு நெசவுத் தொழிற்சாலையைச் சேர்ந்த பள்ளிக்கூடத்தில் நதாஷா ஆசிரியை வேலை பெற்றாள்; தாய் அவளுக்கு அவ்வப்போது சட்ட விரோதமான பிரசுரங்களையும் பத்திரிகைகளையும் அறிக்கைகளையும் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருவாள்.

இதுவே அவளது வேலையாகிவிட்டது. மாதத்தில் எத்தனையோ தடவைகளில், அவள் ஒரு கன்னியாஸ்திரி மாதிரியோ, அல்லது துணிமணி, ரிப்பன், லேஸ் முதலியனவற்றை விற்கும் அங்காடிக்காரிபோலவோ, அல்லது செயலுள்ள பட்டணக்கரைக் குடும்பப் பெண் மாதிரியோ, பக்திமயமான புண்ணிய ஸ்தல யாத்திரிகை போலவோ மாறுவேஷம் தரித்துக்கொள்வாள்; தோளிலே ஒரு பையையாவது; கையிலே ஒரு டிரங்குப்பெட்டியையாவது தூக்கிக்கொண்டே அவள் அந்த மாகாணம் முழுவதும் சுற்றித் திரிந்தாள். ரயிலாகட்டும், படகாகட்டும், ஹோட்டலாகட்டும். சத்திரம் சாவடிகளாகட்டும், எங்குப் போனாலும் அவள்தான் அங்குள்ள அன்னியர்களிடம் மிகுந்த அமைதியோடு முதன் முதல் பேச்சைத் தொடங்குவாள். கொஞ்சம்கூடப் பயனில்லாமல் தன்னுடைய அனுபவ