பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

327


அறிவினாலும், சுமூகமாகப் பழகும் தன்மையாலும் அவர்களது கவனத்தையெல்லாம் தன்பால் கவர்ந்துவிடுவாள்.

ஜனங்களோடு பேசுவதிலும் அவர்களது கதைகளையும் குறைபாடுகளையும், அவர்களைப் புரியாது மயங்கவைக்கும் விஷயங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வதிலும் அவள் விருப்பம் கொண்டாள். வாழ்க்கையில் மிகவும் சலித்துப்போய், காலத்தின் கோலத்தால் தமது வாழ்க்கையில் அடிமேல் அடி வாங்கியதை எதிர்த்து அவற்றைத் தவிர்ப்பதற்கு, தன் மனத்தில் எழும் தெள்ளத் தெளிவான கேள்விகளுக்கு விடையும் மார்க்கமும் தெரியாமல், அதைத் தெரிந்து கொள்வதற்கு இடைவிடாது துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கும் மக்களில் யாரையேனும் கண்டால், தாய்க்கு ஒரே ஆனந்தம் உண்டாகும். கும்பிக்கொதிப்பைத் தவிர்ப்பதற்காக மனிதர்களால் நடத்தப்படும் அமைதியின்மை நிறைந்த போராட்ட வாழ்க்கைச் சித்திரங்கள் அவளது கண் முன்னால் திரை விரித்துப் படர்ந்து தெரியும். எங்குப் பார்த்தாலும் மனிதர்களை ஏமாற்றி ஏதாவது ஆதாயம் பார்ப்பதற்காகவென்று செய்யும் கொச்சையான அப்பட்டமான முயற்சிகளையும் சொந்த சுயநலத்துக்காக மக்களைக் கசக்கிப் பிழிந்து அவர்களது கடைசிச் சொட்டு ரத்தம் வரையிலும் உறிஞ்சிக் குடிப்பதையும் அவள் தெள்ளத் தெளிவாகக் காண முடிந்தது. உலகத்திலே அமோகமான வளமும் செல்வமும் நிறைந்திருப்பதையும் அதே சமயத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தச் செல்வவளத்துக்கு மத்தியிலேயும் கூட, அரைப்பட்டினி குறைப்பட்டினியாக உயிர் வாழ்வதையும் எப்போதும் தேவையின் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி வாழ்வதையும் அவள் கண்டாள் தேவாலயங்களிலோ பொன்னும், வெள்ளியும் நிறைந்து கிடந்தன: அவற்றால் ஆண்டவனுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை, அதே சமயத்தில், அந்தக் கோயில்களின் வாசல்களிலே பிச்சைக்காரர்கள் நடுநடுங்கிக்கொண்டே, தங்களுடைய கைகளிலே வந்து விழும் பிச்சைக்காசுக்காகப் பயனின்றிக் காத்துக்கிடந்தார்கள். இதற்கு முன்பு கூட அவள் இது மாதிரிக் காட்சிகளைக் கண்டிருக்கிறாள்; பணம் படைத்த தேவாலயங்களையும் பொன்னாபரணம் கொண்ட உடைகளை அணிந்த பாதிரிகளையும் அவள் கண்டிருக்கிறாள். இந்த நிலைமை பிச்சைக்காரர்களின் குடிசைகளுக்கும். கிழிந்து பழங்கந்தையாய்ப் போய் மானத்தை மறைக்கக்கூட இயலாத அவர்களது துணிகளுக்கும் எதிர்மறைவான காட்சியாயிருப்பதையும் அவள் கண்டிருக்கிறாள். ஆனால் முன்பெல்லாம் அவள் இந்த மாதிரி எதிரும் புதிருமான வித்தியாசத்தை இயற்கை நியதி என்று கருதிச் சாமாதானம் அடைந்தாள்.