பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

மக்சீம் கார்க்கி


இப்போதோ இந்த நிலைமை அவளால் தாங்க முடியாததாயிருந்தது. பணக்காரர்களைவிட ஏழைகட்கு தேவாலயம் அருகிலேயும் தேவைமிக்கதாயும் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. எனவே பிச்சைக்காரர்களுக்கு இழைக்கும் எந்தக் கொடுமையையும் அவளால் பொறுக்க முடியவில்லை.

அவள் பார்த்த கிறிஸ்துநாதரின் சித்திரங்களிலிருந்தும், கிறிஸ்துவைப்பற்றி அவள் கேள்விப்பட்டிருந்த கதைகளிலிருந்தும், கிறிஸ்துநாதர் எளிய உடைகள் தரித்து ஏழைகளின் நண்பராகவே இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால், இந்தத் தேவாலயங்களிலோ கிறிஸ்துநாதரின் உருவத்தை அவர்கள் பளபளக்கும் பொன்னாலும், சரசரக்கும் பட்டைகளாலும் அலங்கரித்திருந்தார்கள்; பிச்சைக்காரர்கள் அவரது அருளை நாடி தேவாலயத்துக்கு வந்தால் அந்தப் பட்டுப் பட்டாடைகள் அவர்களைப் பார்த்துச் சீறிச் செருமுவதாகவே அவளுக்குத் தெரிந்து. அப்போதெல்லாம் அவள் ரீபின் சொன்ன வாசகத்தைத் தன்னையும் அறியாமல் நினைத்துக் கொள்வாள்.

“கடவுளைக் கொண்டும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள்!”

அவள் தன்னையும் அறியாமலே வரவரப் பிரார்த்தனை செய்வதைக் குறைத்துவிட்டாள். ஆனால் கிறிஸ்துவைப் பற்றி அதிகமாக நினைத்தாள்; அதுமட்டுமல்லாமல், கிறிஸ்துநாதரின் பெயரையே சொல்லாமல், அவரைப் பற்றித் தெரிந்துகூடக் கொள்ளாமல், அதே சமயத்தில் அவள் தனக்குள்ளாகக் கருதியதுபோல், கிறிஸ்துநாதரின் கொள்கைகளின்படி வாழ்ந்து, அவரைப் போலவே இந்த உலகத்தை ஏழைகளின் சாம்ராஜ்யமாகக் கருதி, இவ்வுலகின் சகல செல்வங்களையும் மக்கள் குலத்தோர் அனைவருக்கும் சரிநிகர் சமானமாகப் பங்கீடு செய்ய வேண்டும் என்று விரும்பி வாழ்கின்ற மக்களைப் பற்றியும் அவள் அதிகமாகச் சிந்தித்தாள். அவளது மனம் இந்த எண்ணத்தின் மீதே பதிந்து படித்தது. அவளது சிந்தனைகள் அவளது மனத்துக்குள்ளாகவே லிரிந்து வளர்ந்து அவள் பார்க்கின்ற பொருளனைத்தையும் கேட்கின்ற விஷயங்கள் அனைத்தையும், அணைத்து ஆரத்தழுவி, வரவரத் தீட்சண்ணியம் பெற்று வளர்ந்தோங்கின. அந்தச் சிந்தனைகள் வளர்ந்தோங்கி, ஒரு பிரார்த்தனையின் பிரகாசத்தோடு விளங்கின. இந்த இருள் சூழ்ந்த உலகத்தின் சகல திசா கோணங்கள்மீதும் நமது சர்வ ஜன சமூகத்தின் மீதும், வாழ்க்கையின் மீதும், ஒளிய பிரவாகத்தை எங்கெங்கும் ஒரே சமனமாகப் பாய்ச்சி ஒளி செய்தன. நான் என்றென்றும் ஒரு மங்கிய பரிவுணர்ச்சியோடு நேசித்து வந்த கிறிஸ்துநாதர்—-துக்கம் கலந்த