பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

மக்சீம் கார்க்கி


பக்கமாகச்சென்று என் தலையைத் தொங்கவிட்டவாறு. யாரையுமே நிமிர்ந்து பார்க்காமல் நடந்துவந்தேன். இடுகாட்டில் நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து காற்று வாங்கினேன். அப்புறம் திடீரென எனக்கு ஒரு யோசனை வந்தது....”

‘ஒரே ஒரு யோசனைதானே?” என்று கேட்டு விட்டு, பெருமூச்செறிந்தான் இகோர். “உன் தலையிலே பல யோசனைகளுக்குத் தான் இடமிருக்காதே என்று நினைத்தேன்.”

வெஸோவ்ஷிகோவ் வாய் நிறைந்து சிரித்தான்; தலையை அசைத்துக் கொண்டு பேசினாள்;

“ஓ என் மூளை முன்னை மாதிரி காலியாய் இல்லை! என்ன இகோள் இவானவிச்! உனக்கு இன்னும் சிக்குக் குணமாகவில்லையா?”

“ஒவ்வொருவரும் தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்” என்று ஈரமாய் இருமியவாறு பதிலளித்தான் இகோர்; “சரி உன் கதையை ஆரம்பி”

“அப்புறம் நான் இங்கே இருக்கிற பொதுஜனப் பொருட்காட்சி சாலைக்குள்ளே நுழைந்தேன். உள்ளே சென்று, அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தவாறே யோசித்தேன்; இனிமேல் எங்கே போவது? என்மீது எனக்குக் கோபம் கூட வந்தது. அத்துடன் பசி வேறே! மீண்டும் தெருவுக்கு வந்தேன். மனமே கசந்து போய், எரிச்சலோடு நடந்து வந்தேன். போலீசார் ஒவ்வொருவரையும் கூர்ந்து. கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன், “சரிதான், என்னை மாதிரி மண்னுறுப் பிறவியாக இருந்தால். நான் சிறிது நேரத்தில் எவனாவது ஒரு நீதிபதி முன்னால்தான் இழுத்துப் செல்லப்படுவேன்” என்று நினைத்தேன். இந்தச் சமயத்தில் திடீரென்று என்னை நோக்கி நீலவ்னா ஓடிவருவது தெரிந்தது. நான் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றேன்; பிறகு அவளைப் பின் தொடர்ந்தேன். இவ்வளவுதான் விஷயம்”

“நான் உன்னைப் பார்க்கவில்லையே!” என்று குற்றம் செய்து விட்டவள் மாதிரிக் கூறினாள் தாய். அவள் நிகலாயைக் கூர்ந்து பார்த்தாள்; அவன் முன்னை விட மெலிந்துபோய் இருப்பதாக அவளுக்குப்பட்டது.

“அங்குள்ள தோழர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்” என்று தலையைச் சொறிந்துக்கொண்டே சொன்னான் நிகலாய்.

‘சரி, சிறை அதிகாரிகளைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா? அவர்கள்மீது உனக்கு அனுதாபம் கிடையாதா? அவர்களும்தான்